454 நாட்களுக்கு பிறகு திரும்பிய ரிஷப் பண்ட் – புதிய மைதானம், யாருக்கு சாதகம்? டாஸ் வென்ற பஞ்சாப் பீல்டிங்!

By Rsiva kumar  |  First Published Mar 23, 2024, 3:28 PM IST

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் 2ஆவது போட்டியில் முதலில் பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.


ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் நேற்று தொடங்கியது. ஆர்சிபி அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 2ஆவது போட்டி மொஹாலியில் உள்ள முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் முதல் ஐபிஎல் போட்டி என்பதால், மைதானம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

IPL 2024: ஒரு வருடத்திற்கு பிறகு விளையாடும் ஷிகர் தவான் - பஞ்சாப் கிங்ஸ் போட்டியை ஏன் பார்க்க வேண்டும்?

Tap to resize

Latest Videos

இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி டெல்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது. இதில் கேப்டன் ரிஷப் பண்ட் கிட்டத்தட்ட 454 நாட்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டிக்கு திரும்பியுள்ளார். இதற்கிடையில் ஒரு போட்டியில் கூட ரிஷப் பண்ட் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் அணியில் ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரண் மற்றும் கஜிசோ ரபாடா ஆகிய வெளிநாட்டு வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். இதே போன்று, டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஷாய் ஹோப், மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ்:

ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரண், லியாம் லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்ப்ரீட் பிரார், ஹர்ஷல் படேல், கஜிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், ஷஷாங்க் சிங்.

சப்ஸ்டிடியூட் பிளேயர்: ரிலீ ரோஸோவ், பிராப்சிம்ரன் சிங், தனய் தியாகராஜன், ஹர்ப்ரீத் சிங் பாட்டீயா, வித்வத் காவேரப்பா.

டெல்லி கேபிடல்ஸ்:

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரிக்கி பூய், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்‌ஷர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது, இஷாந்த் சர்மா.

சப்ஸ்டிடியூட் பிளேயர்: அபிஷேக் போரெல், முகேஷ் குமார், ஜாக் பிரேசர் முக்குர்க், விக்கி ஒஸ்ட்வால், பிரவீன் துபே.

இதுவரையில் இரு அணிகளும் 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இதற்கு முன்னதாக சையது முஷ்டாக் அலி டிராபி தொடர் நடத்தப்பட்டுள்ளது.

ரிஷப் பண்டிற்காக டெல்லி போட்டியை பார்க்கலாம் – டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கியமான 5 விஷயங்கள் என்னென்ன?

இதுவரையில் 9 டி20 போட்டிகள் இந்த மைதானத்தில் நடத்தப்பட்டுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி தான் 7 போட்டியிலும், 2ஆவது பேட்டிங் செய்த அணி 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. அதிகபட்ச ஸ்கோர் 225/3. குறைந்தபட்ச ஸ்கோர் 74 ரன்கள் ஆகும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 231 ரன்களும் ஆகும். இதே போன்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 202 ரன்கள் ஆகும். பஞ்சாப் கிங்ஸ் அணியானது தங்களது அணியின் ஜெர்சியை மாற்றியுள்ளது. இதே போன்று டெல்லி கேபிடல்ஸ் அணியும் ஜெர்சியில் மாற்றம் செய்துள்ளது.

 

RISHABH PANT RETURNS TO CRICKET AFTER 454 DAYS...!!!!

- Welcome Back, Pant. 💪 pic.twitter.com/kaGROyKqWK

— Johns. (@CricCrazyJohns)

 

click me!