ரன் அவுட் ஆனபோதும் ஜிங் பெயில்ஸ் பேட்டரி பிரச்சனையால் தப்பித்த கருணாரத்னே!

By Rsiva kumar  |  First Published Mar 25, 2023, 3:11 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சமிகா கருணாரத்னே ரன் அவுட் ஆன போதிலும் ஜிங் பெயில்ஸ் பேட்டரி ஒர்க் ஆகாததால் அவருக்கு நாட் அவுட் கொடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
 


நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. எனினும், 2 போட்டியிலும் தோல்வி அடைந்தது. இதையடுத்து, தற்போது 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி விளையாடி வருகிறது. இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று நடந்தது.

ஹர்திக் பாண்டியா இல்லையென்றாலும் எங்ககிட்ட இன்னொருவர் இருக்காரு - குஜராத் டைட்டன்ஸ் இயக்குநர் பேட்டி!

Tap to resize

Latest Videos

இதில், டாஸ் வென்ற இலங்கை அணி பீலிடிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 49.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்கள் சேர்த்தது. இதில், பின் ஆலன் 51 ரன்களும், டேரில் மிட்செல் 47 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 49 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் பந்து வீச்சில் கருணாரத்னே 4 விக்கெட்டும், ரஜிதா மற்றும் லகிரு குமாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். மதுசங்கா மற்றும் ஷனாகா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து 275 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இலங்கை அணி ஆடியது. இதில், 19.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இலங்கை 76 ரன்கள் மட்டுமே எடுத்து 198 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. போட்டியின் 18ஆவது ஓவரை டிக்னர் வீசினார். அப்போது கருணாரத்னே பேட்டிங் திசையில் இருந்தார். அப்போது 17.4ஆவது பந்தை கருணாரத்னே லெக்சைடு மிட் விக்கெட் திசையில் பந்தை அடித்துவிட்டு ரன் எடுக்க ஓடியிருக்கிறார்.

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்திய வீரர் ருத்ராங்ஷ் பாட்டீல் வெண்கல பதக்கம்!

ஆனால், எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகியுள்ளார். எனினும், அவர் கிரீஸுக்கு வெளியில் இருந்தும் கூட ரன் அவுட் கொடுக்கப்படவில்லை. நாட் அவுட் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், ஜிங் பெயில்ஸின் பேட்டரி வேலை செய்யவில்லை. இதனால் மூன்றாவது நடுவர் நாட் அவுட் கொடுத்துள்ளார். அப்போது கருணாரத்னே 20 பந்துகளில் 11 ரன் எடுத்திருந்தார். இதையடுத்து, ஷிப்லி வீசிய 19ஆவது ஓவரில் 18.4 ஆவது பந்தில் கிளென் பிலிப்ஸியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

முதல் IPL vs முதல் WPL - இறுதிப் போட்டியில் அப்போ தல தோனி; இப்போ ஹர்மன்ப்ரீத் கவுர்: அப்போ வெற்றி யாருக்கு?

click me!