NZ vs SL: ஹென்ரி ஷிப்ளி என்ற இளம் பவுலரிடம் மண்டியிட்டு சரணடைந்த இலங்கை..! முதல் ODI-யில் நியூசி., அபார வெற்றி

By karthikeyan VFirst Published Mar 25, 2023, 3:02 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 198 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது நியூசிலாந்து அணி.
 

இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இலங்கையை ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை வென்றது.

அதைத்தொடர்ந்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்கள் நடக்கின்றன. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இலங்கை அணி: 

நுவாநிது ஃபெர்னாண்டோ, பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சாரித் அசலங்கா, ஆஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, கசுன் ரஜிதா, லஹிரு குமாரா, தில்ஷான் மதுஷங்கா.

IPL 2023: சிஎஸ்கே அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்..! 4 வெளிநாட்டு வீரர்களுமே மேட்ச் வின்னர்கள்

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், சாத் பௌஸ், வில் யங், டேரைல் மிட்செல், டாம் லேதம் (கேப்டன், விக்கெட் கீப்பர்), க்ளென் ஃபிலிப்ஸ், ராச்சின் ரவீந்திரா, ஹென்ரி ஷிப்ளி, இஷ் சோதி, மேட் ஹென்ரி, பிளைர் டிக்னெர்.

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் பௌஸ் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஃபின் ஆலன் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து 51 ரன்கள் அடித்தார். வில் யங் (26), டேரைல் மிட்செல் (49), க்ளென் ஃபிலிப்ஸ் (39), ராச்சின் ரவீந்திரா(49) ஆகியோரும் பங்களிப்பு செய்ய, 49.3 ஓவரில் 274 ரன்கள் அடித்தது நியூசிலாந்து அணி.

IPL 2023: இந்த முறை கோப்பையை தூக்கியே தீரணும்..! ஆர்சிபி அணியின் வலுவான ஆடும் காம்பினேஷன்

275 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை வீரர்கள், நியூசிலாந்து அணியின் 26 வயது இளம் ஃபாஸ்ட் பவுலரான ஹென்ரி ஷிப்ளியிடம் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். இலங்கை வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களுக்கு மளமளவென ஆட்டமிழக்க, அந்த அணி 19.5 ஓவரில் வெறும் 76 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 198 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஹென்ரி ஷிப்ளி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார்.

click me!