ஹர்திக் பாண்டியா மட்டுமின்றி, மற்றொருவரும் கூட கேப்டன் பதவிக்கு தகுதியானவராக எங்களிடம் இருக்கிறார் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கிரிக்கெட் நிர்வாக இயக்குநர் விக்ரம் சொலாங்கி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக 10 அணிகள் பங்கேற்றது. அதற்கு முன்னதாக 8 அணிகள் கொண்ட ஐபிஎல் தொடர் நடந்தது. கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 2 அணிகள் பங்கேற்றன. இதில் தனது முதல் சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை கைப்பற்றியது. கடந்த 14 சீசன்கள் வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா கடந்த சீசனில் மும்பை அணியிலிருந்து வெளியேறி குஜராத் அணியில் இடம் பெற்றார். அதோடு, கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்திய வீரர் ருத்ராங்ஷ் பாட்டீல் வெண்கல பதக்கம்!
அதன் பிறகு குஜராத் அணிக்கு டைட்டிலும் வாங்கி கொடுத்தார். இந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் பொறுப்பு குறித்து பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கிரிக்கெட் நிர்வாக இயக்குநர் விக்ரம் சோலாங்கி ஹர்திக் பாண்டியா மட்டுமின்றி, மற்றொரு சிறப்பான கேப்டன் ஒருவரும் தங்களிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது: கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா மீது அதிக நம்பிக்கை இருந்தது. ஆகையால், தான் அவரை கேப்டனாக நியமித்தோம்.
வெற்றியும் தேடி கொடுத்தார். இதையடுத்து அவர் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். இவரைத் தொடர்ந்து தற்போது எங்களது அணியில் மற்றொரு தூணாக சுப்மல் கில் இருக்கிறார். அவரிடம் தலைமை பண்பு இருக்கிறது. இனி வரும் காலங்களில் அவர் கேப்டனாகவும் வளர்வார். ஹர்திக் பாண்டியா இல்லாத போது அவரை கேப்டனாக பயன்படுத்துவதற்கு தயாராக இருக்கிறோம். இவ்வளவு ஏன், இந்திய அணியின் எதிர்காலமாக கூட அவர் வளரலாம். எதிர்காலத்தில் அவர் சிறந்த கேப்டனாக கூட வளர்வார் என்று கூறியுள்ளார்.