இலங்கைக்கு எதிரான 2ஆவது சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 2ஆவது சூப்பர் 4 சுற்று போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியானது தற்போது கொழும்புவில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகில் அல் ஹசன் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். அதன்படி இலங்கை அணி பேட்டிங் விளையாட உள்ளது.
வங்கதேசம்:
முகமது நைம், மெஹிதி ஹசன் மிராஸ், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), ஷிமாம் ஹூசைம், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத், நசும் அகமது,
இலங்கை:
பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரமா, சரித் அசங்கா, தனஞ்சயா டில் சில்வா, தசுன் ஷனாகா (விக்கெட் கீப்பர்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ரஜிதா, மதீஷா பதிரனா
ENG vs NZ: ராகுல் டிராவிட் விராட் கோலி சாதனையை முறியடித்த டெவான் கான்வே – டேரில் மிட்செல் ஜோடி!
வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்த ஆசிய கோப்பை தொடரில் 2ஆவது முறையாக மோதுகிறது. இதுவரையில் நடந்த 52 ஒரு நாள் போட்டிகளில் இலங்கை 41 போட்டிகளிலும், வங்கதேச அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு போட்டிகளுக்கு முடிவு எட்டவில்லை.
வங்கதேச அணியில் அஃபிப் ஹூசைனுக்குப் பதிலாக நசும் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நேற்று இலங்கை மற்றும் இந்திய வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்த போது விராட் கோலி, இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.