ENG vs NZ: ராகுல் டிராவிட் விராட் கோலி சாதனையை முறியடித்த டெவான் கான்வே – டேரில் மிட்செல் ஜோடி!

Published : Sep 09, 2023, 01:31 PM IST
ENG vs NZ: ராகுல் டிராவிட் விராட் கோலி சாதனையை முறியடித்த டெவான் கான்வே – டேரில் மிட்செல் ஜோடி!

சுருக்கம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி முதலில் 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், 2-2 என்று டி20 தொடரானது சமனானது. இதையடுத்து நேற்று இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் விளையாடி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 291 ரன்கள் எடுத்தது. இதில், மலன் 54 ரன்களும், கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான ஜோஸ் பட்லர் 72 ரன்களில் ஆட்டமிழந்தார்.

US Open Mens Doubles Final 2023: யுஎஸ் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் ரோகன் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி!

பென் ஸ்டோக்ஸ் 52 ரன்னிலும், லிவிங்ஸ்டன் 52 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு 292 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்து பேட்டிங் ஆடியது. இதில் வில் யங் 29 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஹென்றி நிக்கோலஸ் 26 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு இணைந்த டெவான் கான்வே மற்றும் டேரில் மிட்செல் இருவரும் ஜோடி சேர்ந்து இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் பந்துகளை சரமாரியாக வெளுத்து வாங்கினர்.

World Cup Golden Ticket: கோல்டன் டிக்கெட் என்றால் என்ன? உலகக் கோப்பை கிரிக்கெட்டில் யாருக்கு அது வழங்கப்படும்?

இதில், டெவான் கான்வே 121 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உள்பட 111 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று டேரில் மிட்செல் 91 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் உள்பட 118 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக நியூசிலாந்து அணி 45.4 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 297 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில், டெவான் கான்வே மற்றும் டேரில் மிட்செல் இருவரும் இணைந்து 3 ஆவது விக்கெட்டுக்கு 180 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். அதுமட்டுமின்றி இதற்கு முன்னதாக கார்டிஃப் மைதானத்தில் ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து 170 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர்.

SL vs BAN: 2ஆவது சூப்பர் 4 சுற்று போட்டியில் இலங்கை– வங்கதேசம் பலப்பரீட்சை: மழையால் பாதிக்கப்படுமா?

அதற்கு முன்னதாக, எம்.எஸ்.தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் இணைந்து 144 ரன்கள் எடுத்துக் கொடுத்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக, 4 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!