திட்டமிடப்பட்டி அக்.15ல் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் நடக்க வேண்டும்: ஷாஹீத் அப்ரிடி

By Rsiva kumar  |  First Published Jul 16, 2023, 10:24 AM IST

இந்தியாவிற்கு சென்று பாகிஸ்தான் கண்டிப்பாக உலகக் கோப்பை 2023 தொடரில் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாஹீத் அப்ரிடி கூறியுள்ளார்.


ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு இன்னும் 3 மாதங்களுக்கு குறைவாகவே உள்ள நிலையில், பாகிஸ்தான் டீம், இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்வது தொடர்பான விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆம், வரும் அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கும் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றனர். இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீ சங்கருக்கு வெள்ளிப்பதக்கம்: 14 பதக்கங்களுடன் இந்தியா 3ஆவது இடம்!

Tap to resize

Latest Videos

இது ஒரு புறம் இருக்க, பாகிஸ்தான் நடத்தும் ஆசிய கோப்பை தொடருக்கு, இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது இலங்கையில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆசிய கோப்பை 2023 தொடருக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தொடர்ந்து பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இடையில் தொடர்ந்து இழபறி நீடித்து வருகிறது.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்.. தங்கத்தை குவிக்கும் இந்திய வீரர்கள் - பதக்கபட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம்?

இந்தியா, பாகிஸ்தான் வந்தால், பாகிஸ்தானும், இந்தியா வந்து உலகக் கோப்பை விளையாட வரும் என்று அரசியல் வட்டாரத்தில் பூகத்தை கிளப்பி வருகிறது. பாகிஸ்தான், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வது தொடர்பான விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான ஷாஹித் அப்ரிடி, உலகக் கோப்பை 2023 தொடருக்கு பாபர் அசாமும், அவரது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், இந்தியாவிற்கு தங்களது பயணத்தை தொடங்க வேண்டும். அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடக்கும் அகமதாபாத் போட்டியில் பங்கேற்க வேண்டும்.

 தப்பு கணக்கு போட்ட ராகுல் டிராவிட்: சுப்மன் கில் நம்பர் 3க்கு செட்டாவாரா? 

இது எங்கள் வாழ்க்கையில் (இந்திய சுற்றுப்பயணங்கள்) அதிக அழுத்தமான தருணம். நாங்கள் பவுண்டரி அடித்தபோது, ​​உற்சாகப்படுத்த யாரும் இல்லை. பெங்களூர் டெஸ்டில் வென்று ஹோட்டலுக்குப் புறப்பட்டபோது, ​​அணி பேருந்து மீது கற்கள் வீசப்பட்டன. அழுத்தம் நிச்சயமாக இருக்கிறது, ஆனால் அழுத்தம் இருக்கும்போது அது வேடிக்கையாக இருக்கும் அவர் கூறினார்.

மேலும், “பாகிஸ்தான் இந்தியாவுக்கு செல்லக்கூடாது என்று மக்கள் சொல்கிறார்கள். நான் அதை முற்றிலும் எதிர்க்கிறேன், நாங்கள் அங்கு சென்று போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன், என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஷான் கிஷான் மீது கோபத்தில் ரோகித் சர்மா: அறிமுக டெஸ்டில் ஒரு ரன் எடுக்க 20 பந்துகளா?

click me!