வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இஷான் கிஷான் ஒரு ரன் எடுக்க 20 பந்துகள் பிடித்து ரோகித் சர்மாவின் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நடந்தது.
மும்பையில் 5 BHK வீட்டுக்கு மாறும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் குடும்பம்!
இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில், ரோகித் சர்மா 103 ரன்கள் எடுத்ததன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 10ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அடுத்து வந்த சுப்மன் கில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அஸ்வின் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்த சாதனைகளின் பட்டியல்!
இதையடுத்து விராட் கோலி களமிறங்கினார். கோலி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் இணைந்து ரன்கள் குவித்தனர். ஜெஸ்வால், 171 ரன்கள் எடுத்து ஏராளமான சாதனைகள் படைத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே 3 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா தன் பங்கிற்கு 37 ரன்கள் சேர்த்தார். அடுத்து தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இஷான் கிஷான் ஒரு ரன் எடுக்க, 20 ரன்கள் பிடித்தார். இது ரோகித் சர்மாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியது.
2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வெற்றியோடு தொடங்கிய இந்தியா!
டிரெஸிங் ரூமில் இருந்து கொண்டு சைகை மூலமாக தனது கோபத்தை வெளிப்படுத்தி டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். ஏற்கனவே இஷான் கிஷான் களமிறங்கும் போது கூட அடித்து ஆட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், அதையும் மீறி, முதல் டெஸ்ட் போட்டி என்பதால் மெதுவாக விளையாட வேண்டும் என்று 20 பந்துகளுக்கு ஒரு ரன் எடுத்தார்.
WTC 2023-25: எல்லோ கோட்டையும் அழித்து, மறுபடியும் இந்தியா – ஆஸ்திரேலியாவா? இனிமேல் தான் தெரியும்!
இறுதியாக இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் 271 ரன்கள் பின் தங்கிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, இறுதியாக 130 ரன்கள் மட்டுமே எடுத்து இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக இந்தியா 2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான முதல் வெற்றியை பெற்றது.