வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் பல சாதனைகள் படைத்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் ஆடியது.
இதையடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், இந்தியா தனது முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில், 5 விக்கெட்டுகளை இழந்து, 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 10ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வெற்றியோடு தொடங்கிய இந்தியா!
இதில் ரோகித் சர்மா 103 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலமாக அறிமுகமான யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 387 பந்துகளில் 171 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில், 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
WTC 2023-25: எல்லோ கோட்டையும் அழித்து, மறுபடியும் இந்தியா – ஆஸ்திரேலியாவா? இனிமேல் தான் தெரியும்!
விராட் கோலி 76 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பின்னர் 271 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2ஆவது இன்னிங்ஸ் ஆடியது. இதில், 10 விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்ற 306ஆவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
5 விக்கெட்டுகள்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அதிக முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின் 2ஆவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்திய அணிக்காக ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் அஸ்வின் இணைந்துள்ளார். இதன் மூலமாக 8 முறை 10 விக்கெட்டுகள் கைப்பற்றிய அனில் கும்ப்ளே சாதனையை அவர் சமன் செய்துள்ளார். மேலும், ஹர்பஜன் சிங் 5 முறை 10 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்!
அறிமுக போட்டியில் சதம்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜெய்ஸ்வால் 17ஆவது இந்திய வீரராக அறிமுக போட்டியில் சதம் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக 15ஆவது வீரராக அறிமுக டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா சதம் அடித்துள்ளார்.
150 ரன்கள் எடுத்த இளம் இந்திய வீரர்:
அறிமுக டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 ரன்கள் எடுத்த 5ஆவது இளம் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அதுவும் 21 வயது 196 நாட்களே ஆன நிலையில், இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 1976 ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாவேத் மியான்டத் என்பவர் 19 வயது 119 நாட்கள் ஆன நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 150 ரன்கள் எடுத்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.
WTC Final 2023க்கு என்னை ஏன் எடுக்கவில்லை? சொல்லாமல் புரிய வைத்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
அதிகபட்ச ரன் எடுத்த இந்திய வீரர் – 171 ரன்கள்:
அறிமுக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிகபட்சமாக 171 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா இந்த சாதனையை படைத்துள்ளனர்.
அறிமுக டெஸ்டில் இளம் வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை:
அறிமுக டெஸ்ட் போட்டியில் 4ஆவது இளம் வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக, பிரித்வி ஷா (18 வயசு 329 நாட்கள்), அப்பாஸ் அலி பேக் (20 வயசு 126 நாட்கள்), குண்டப்பா விஸ்வநாத் (20 வயசு 276 நாட்கள்).
தொடக்க வீரர்களின் அதிகபட்ச ரன்கள் பார்ட்னர்ஷிப்:
ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக முதல் விக்கெட்டிற்கு 229 ரன்கள் குவித்தனர். இதற்கு முன்னதாக சேத்தன் சௌகான் மற்றும் சுனில் கவாஸ்கர் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் கொடுத்த இந்திய வீரர்கள்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 229 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்னதாக வாசீம் ஜாஃபர் மற்றும் விரேந்திர சேவாக் முதல் விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தனர்.
700 விக்கெட்டுகள்:
சர்வதேச கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் 700 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக 700 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். முதல் இன்னிங்ஸில் 5 மற்றும் 2ஆவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலமாக மொத்தம் 12 விக்கெட்டுகளை கைப்பற்றி சர்வதேச கிரிக்கெட்டில் 709 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
அதற்கு முன்னதாக அனில் கும்ப்ளே 956 விக்கெட்டுகளும், ஹர்பஜன் சிங் 711 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர். அஸ்வின் இன்னும் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினால், ஹர்பஜன் சிங் சாதனையை சமன் செய்வார். 3 விக்கெட்டுகள் கைப்பற்றினால் சாதனையை சமன் செய்வார்.