2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வெற்றியோடு தொடங்கிய இந்தியா!

By Rsiva kumar  |  First Published Jul 15, 2023, 10:51 AM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை இந்தியா வெற்றியோடு தொடங்கியுள்ளது.


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கடந்த ஜூன் 7ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில், இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதையடுத்து 2023-25 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அட்டவணை வெளியானது. இதில், 9 அணிகள் இடம் பெற்றுள்ளன.

WTC 2023-25: எல்லோ கோட்டையும் அழித்து, மறுபடியும் இந்தியா – ஆஸ்திரேலியாவா? இனிமேல் தான் தெரியும்!

Tap to resize

Latest Videos

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இந்தியா ஆகிய 9 அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கின்றன. இதில் 3 ஹோம் மற்றும் 3 அவே டெஸ்ட் தொடர்கள் என்று 6 தொடர்கள் நடத்தப்படும்.  ஒவ்வொரு தொடரும் 2 முதல் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்டதாக இருக்கும்.

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்!

இதில், மொத்தமாக 27 தொடர்கள் மற்றும் 68 போட்டிகள் நடக்க உள்ளன. இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. 2ஆவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

தாமதமாகும் ஆசிய கோப்பை 2023 அட்டவணை; BCCI vs PCB மீண்டும் மீட்டிங்!

இதையடுத்து 3ஆவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வரும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடக்கும் ஆஷஸ் தொடர் மூலமாக ஆரம்பமாகிறது. இந்த 3ஆவது சாம்பியன்ஷிப் தொடர் வரும் ஜூன் 2025 ஆம் ஆண்டு முடிவடைகிறது. இந்திய அணிக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸில் தொடங்கியது.

WTC Final 2023க்கு என்னை ஏன் எடுக்கவில்லை? சொல்லாமல் புரிய வைத்த ரவிச்சந்திரன் அஸ்வின்!

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டொமினிகாவில் நடந்தது. இதில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வெற்றியோடு தொடங்கியுள்ளது.

click me!