வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான யஷஸ்வி ஜெய்ஸ்வால், மும்பையில் உள்ள தனது வீட்டை மாற்றியுள்ளார்.
இந்திய அணியின் வருங்கால எதிர்காலமாக இருப்பவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்றார். அதோடு, நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். எனினும், அவர் 200 ரன்கள் அடிக்காதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்வின் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்த சாதனைகளின் பட்டியல்!
அறிமுக டெஸ்ட் போட்டியில் 171 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடிய விதம் குறித்து அவரது சகோதரர் தேஜஸ்வி கூறியிருப்பதாவது: யஷஸ்வால் ஜெய்ஸ்வாலின் வாழ்க்கையில் ஒரேயொரு ஆசை தான் இருந்தது. அதுவும், சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது தான் அந்த ஆசை. ஏனென்றால், நாங்கள் கடந்து வந்த பாதை அப்படி. அதனை திரும்பி பார்க்கும் போது தான் சொந்த வீடு எவ்வளவு முக்கியமானது என்று எங்களுக்கு தெரியும். மும்பையில் சொந்த வீடு வாங்குவது சாதாரணமானது ஒன்றும் கிடையாது.
2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வெற்றியோடு தொடங்கிய இந்தியா!
நாங்கள் 2 பெட் ரூம் கொண்ட வீட்டிலிருந்து 5 BHK வீட்டிற்கு மாறப் போகிறோம். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கூட வீடு மாறப் போவது குறித்து தான் கேட்டார். சீக்கிரமாகவே வீட்டை மாற்ற வேண்டும் என்று சொன்னார். இதையடுத்து, புதிய வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்கியிருக்கிறோம்.
ஆனால், இன்னும் சொந்த வீடு வாங்கவில்லை. தற்போது நாங்கள் செல்லும் வீடு கூட வாடகை வீடு தான். தற்போது வரையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பழைய கார் தான் பயன்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
WTC 2023-25: எல்லோ கோட்டையும் அழித்து, மறுபடியும் இந்தியா – ஆஸ்திரேலியாவா? இனிமேல் தான் தெரியும்!