5 போட்டியிலும் தோற்று முதல் அணியாக நடையை கட்டிய பா11சி திருச்சி!

By Rsiva kumar  |  First Published Jun 30, 2023, 12:08 PM IST

டிஎன்பிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 5 போட்டியிலும் தோல்வி அடைந்த பா11சி திருச்சி அணி முதல் அணியாக வெளியேறியுள்ளது.


தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் 7 போட்டிகளில் லீக் சுற்று முடிந்து பிளே ஆஃப் சுற்று ஆரம்பிக்க உள்ளது. இதுவரையில் நடந்த 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்ற லைகா கோவை கிங்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஜியு-ஜிட்சு போட்டிக்கு இந்தியா தகுதி - ஜியு-ஜிட்சு வீரர் சித்தார்த் சிங்!

Tap to resize

Latest Videos

இதே போன்று விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்து முதல் அணியாக பா11சி திருச்சி அணி வெளியேறியுள்ளது. இந்த நிலையில், நேற்று டிஎன்பிஎல் தொடரின் 21ஆவது போட்டி நடந்தது. இதில், சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும், பா11சி திருச்சி அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பா11சி திருச்சி அணி பேட்டிங் ஆடியது.

ஜடேஜா எல்லா போட்டியிலும் விளையாடினால் அவர் தான் அதிக விக்கெட் எடுப்பார் – முத்தையா முரளிதரன்!

அதன்படி முதலில் ஆடிய பா11சி திருச்சி அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், தொடக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜூ 0 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் சரண் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த மணி பாரதி அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே திருச்சி 105 ரன்கள் எடுத்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 9000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!

பின்னர், 106 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்ட சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி விளையாடியது. இதில் விக்கெட் கீப்பர் சுரேஷ் குமார் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெகதீசன் கௌசிக் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்வப்னில் சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

கடைசியாக சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 108 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 3ஆவது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது. ஆனால், 5 போட்டிகளில் விளையாடி 5 போட்டியிலும் தோல்வி அடைந்த பா11சி திருச்சி முதல் அணியாக டிஎன்பிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. எனினும், வரும் ஜூலை 2ஆம் தேதி சேப்பாக்கம் அணியையும், 5ஆம் தேதி நெல்லை ராயல் கிங்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!