இந்தியாவுக்கு எதிராக இன்று நடக்கும் முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுவிட்டால், உலகின் நம்பர் 1 ஒருநாள் அணியாக ஆஸ்திரேலியா திகழும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியனானது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி இன்று மும்பையில் நடக்கிறது. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியில் ரோகித் சர்மா விளையாட மாட்டார். அவரது மைத்துனனுக்கு திருமணம் என்பதால், இந்தப் போட்டியில் அவர் கலந்து கொள்ளவில்லை. 2ஆவது ஒரு நாள் போட்டியில் அவர் இடம் பெறுவார். இன்றைய போட்டிக்கு ரோகித் சர்மா கிடையாது என்பதால், அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுகிறார்.
ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு வலி பிரச்சனையால் இந்த போட்டியில் விளையாடவில்லை. எனினும், அவர் தொடரிலிருந்து விலகுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ரோகித் இல்லாத நிலையில், இஷான் கிஷான் தான் சும்பன் கில்லுடன் இணைந்து ஓபனிங் இறங்குவார் என்று தெரிகிறது. இதற்கு முன்னதாக வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் காயம் காரணமாக விலகிய ரோகித் சர்மாவுக்குப் பதிலாக அணியில் இடம் பெற்ற இஷான் கிஷான் 210 ரன்கள் இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னிக்கு நான் தான் பொளந்து கட்டப் போறேன் - மழை வரும், ஆனா வராது; மேட்ச் நடக்குமா? நடக்காதா?
இந்த நிலையில், இந்தப் போட்டியில் மட்டும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுவிட்டால், உலகின் நம்பர் 1 ஒருநாள் அணியாக ஆஸ்திரேலியா திகழும். தற்போது வரையில், 44 போட்டிகளில் 5010 புள்ளிகள் மற்றும் 114 ரேட்டிங்குடன் நம்பர் ஒன் அணியாக இந்தியா திகழ்கிறது. இதில், ஆஸ்திரேலியா 112 ரேட்டிங் உடன் 2ஆவது இடத்தில் உள்ளது. ஒருவேளை இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா ஜெயித்துவிட்டால், ஆஸ்திரேலியா நம்பர் ஒன் அணியாக வாகை சூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன் மீண்டும் வருவார் - ரிஷப் பண்ட் தோள் மீது கை போட்டு ஹாயாக அமர்ந்து பேசிய யுவராஜ் சிங்!
இதற்கிடையில், இந்தப் போட்டியில் மழை குறுக்கீடு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நேற்று மும்பையில் இடைவிடாமல் மழை பொழிந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 17ஆம் தேதியான இன்று வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
India Playing XI 1st ODI: ரோகித், ஷ்ரேயாஸ் கிடையாது: ஹர்திக் பாண்டியா கேப்டன் ஓகே, யாரு சார் ஓபனிங்?