பாகிஸ்தானை பந்தாடி 18 சிக்ஸர், 24 பவுண்டரி விளாசிய வார்னர் – மார்ஷ் ஜோடி – ஆஸ்திரேலியா 367 ரன்கள் குவிப்பு!

By Rsiva kumar  |  First Published Oct 20, 2023, 6:40 PM IST

பாகிஸ்தானுக்கு எதிரான 18ஆவது கிரிக்கெட் லீக் போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரது சதம் சாதனையால் ஆஸ்திரேலியா 367 ரன்கள் குவித்துள்ளது.


கிரிக்கெட் உலகக் கோப்பையின் 18ஆவது லீக் போட்டி இன்று பெங்களூருவில் உள்ள சின்னஸ்வாமி மைதானத்தில் நடந்தது. இதில், பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

Australia vs Pakistan: சிக்ஸர் மழை பொழிந்த வார்னர் – பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 4 முறை சதம் விளாசி சாதனை!

Tap to resize

Latest Videos

இதில், மிட்செல் மார்ஷ் இன்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தொடக்க முதலே இருவரும் நிதானமாகவும், பொறுமையாகவும் விளையாடி வந்தனர். முதல் 10 ஓவர்களில் இந்த ஜோடி 82 ரன்கள் குவித்தது. இதில், டேவிட் வார்னர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தானின் உசாமா மிர் கோட்டைவிட்டார். அப்போது வார்னர் 10 ரன்கள் எடுத்திருந்தார்.

அதன் பிறகு இருவரும் சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசி சதம் விளாசினர். வார்னர் 85 பந்துகளில் சதம் விளாசி பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 4ஆவது சதம் அடித்து சாதனை படைத்தார். மேலும், ஒரு தொடக்க வீரராக 47 சதங்கள் விளாசியுள்ளார். வார்னரைத் தொடர்ந்து மிட்செல் மார்ஷ் சதம் விளாசி சாதனை படைத்தார். பிறந்தநாளன்று சதம் விளாசி சாதனை படைத்தவர்களின் பட்டியலில் மிட்செல் மார்ஷும் இணைந்துள்ளார்.

IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல் – புதிய சிக்கலில் டீம் இந்தியா!

மார்ஷ் 100 பந்துகளில் 100 ரன்கள் குவித்து தனது பிறந்தநாள் பரிசாக அனைவருக்கும் கொடுத்துள்ளார்.

பிறந்தநாளன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் சதம் அடித்தவர்கள்:

140* - டாம் லாதம் vs நெதர்லாந்த், ஹாமில்டன், 2022 (30th b’day)

134 – சச்சின் டெண்டுல்கர் vs ஆஸ்திரேலியா, ஷார்ஜா, 1998 (25th)

131* - ராஸ் டெய்லர் vs பாகிஸ்தான், பல்லேகலே, 2011 (27th)

130 – சனத் ஜெயசூர்யா vs வங்கதேசம், கராச்சி, 2008 (39th)

100* - வினோத் காம்ப்ளி vs இங்கிலாந்து, ஜெய்ப்பூர் 1993 (21st)

101* - மிட்செல் மார்ஷ் vs பாகிஸ்தான், பெங்களூரு, 2023 (32nd)

ராஸ் டெய்லரைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பிறந்தநாளன்று சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை மிட்செல் மார்ஷ் படைத்துள்ளார்.

IND vs BAN:டிரெஸிங் ரூமில் அமர்க்களப்படுத்திய பீல்டிங் கோச்: ரவீந்திர ஜடேஜாவிற்கு சிறந்த பீல்டருக்கான பதக்கம்!

தொடர்ந்து விளையாடிய மார்ஷ் 108 பந்துகளில் 10 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் உள்பட 121 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் கோல்டன் டக்கில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் 7 ரன்களில் நடையை கட்டினார். ஒருபுறம் அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 124 பந்துகளில் 14 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் உள்பட 163 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர், இன்னும் 3 மற்றும் 15 ரன்கள் எடுத்திருந்தால் இதற்கு முன்னதாக அவரது உலகக் கோப்பை ரன்கள் சாதனையை முறியடித்திருப்பார்.

India vs Bangladesh: நானும் கேட்ச் பிடிச்சிட்டேன், பீல்டிங் பயிற்சியாளரிடம் பதக்கம் கேட்ட ரவீந்திர ஜடேஜா!

இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டவே ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 367 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 259 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த நிலையில் அடுத்த 108 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

click me!