நியூசிலாந்து அணிக்கு எதிரான 21ஆவது லீக் போட்டி வரும் 22ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், அந்தப் போட்டியிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 17ஆவது லீக் போட்டியில் முதலில் விக்கெட் விழாத நிலையில், ஹர்திக் பாண்டியாவை பந்து வீசுவதற்கு ரோகித் சர்மா அழைத்தார். இதையடுத்து ஹர்திக் பாண்டியா 9ஆவது ஓவரை வீசுவதற்கு வந்தார். முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. 2ஆவது பந்து பவுண்டரிக்கு சென்றது. ஸ்ட்ரைட்டாக அடிக்கப்பட்ட பந்தை ஹர்திக் பாண்டியா தடுக்கும் முயற்சியில் இறங்கிய போது தான் அவருக்கு இடது காலில் கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு எஞ்சிய 3 பந்துகளை விராட் கோல் வீசி அந்த ஓவரை முடித்தார். வலி காரணமாக ஹர்திக் பாண்டியாவால் ஓவர் போட முடியாத நிலையில் மைதானத்திலிருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர் ஸ்கேன் பரிசோதனைக்கு சென்று வந்துள்ளார். எனினும், அதில் பெரிதாக பாதிப்பு ஒன்றும் இல்லை என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால், அவர் வரும் 22ஆம் தேதி தரமசாலாவில் நடக்கும் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியிலிருந்து விலகியுள்ளார். மேலும், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தர்மசாலா வந்தடைந்துள்ளனர்.
இதில், ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை. அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சிகிச்சைக்காக செல்ல இருக்கும் நிலையில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியிலிருந்து விலகியுள்ளார். மேலும் இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 29 ஆம் தேதி நடக்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 29ஆவது லீக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் லக்னோவுடன் இணைவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
IND vs BAN: வைடா நோ நோ நீ விளையாடு நான் பாக்குறேன்னு வேடிக்கை பார்த்த நடுவர் ரிச்சர்டு கெட்டில்பரோ!
ஹர்திக் பாண்டியா இல்லையென்றால், அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம் பெறுவார் என்றும், ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக முகமது ஷமி இடம் பெறுவார் என்று தகவல் தெரிவிக்கின்றது.