ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 18ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இலங்கை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா விளையாடிய 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று பாகிஸ்தான் விளையாடிய 3 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
AUS vs PAK: ஆஸ்திரேலியாவா? பாகிஸ்தானா? வெற்றி யாருக்கு? உலகக் கோப்பை ரெக்கார்ட்ஸ் என்ன சொல்கிறது?
இந்த நிலையில் தான் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று நடக்கும் 18ஆவது லீக் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடக்க இருக்கிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். மேலும் பாகிஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷதாப் கானுக்குப் பதிலாக உசாமா மிர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்த வரையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆஸ்திரேலியா:
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஸ் ஹசல்வுட், மார்னஷ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.
பாகிஸ்தான்:
அப்துல்லா ஷபீக், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் சகீல், இப்திகார் அகமது, உசாமா மிர், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷகீன் அஃப்ரிடி, ஹரிஷ் ராஃப்
IND vs BAN: வைடா நோ நோ நீ விளையாடு நான் பாக்குறேன்னு வேடிக்கை பார்த்த நடுவர் ரிச்சர்டு கெட்டில்பரோ!
இரு அணிகளும் இதற்கு முன்னதாக 107 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 69 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்கிறது. பாகிஸ்தான் 34 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. ஒரு போட்டி டை ஆனது.
இதே போன்று இரு அணிகளும் 10 முறை உலகக் கோப்பை போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 6 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 4 போட்டிகளில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், மார்னஷ் லபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஸ்டீவ் ஸ்மித் என்று பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர்.
இதே போன்று பாகிஸ்தான் அணியிலும் அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், சவுத் சகீல், இப்திகார் அகமது என்று சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். தற்போது நடந்து வரும் இந்த உலகக் கோப்பை போட்டிகளின் படி பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.