வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியா காலில் வலி ஏற்படவே உடனடியாக மைதானத்தை வெளியில் வெளியேறினார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 17ஆவது லீக் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 256 ரன்கள் குவித்தது. இதில் லிட்டன் தாஸ் 66 ரன்களும், தன்ஷித் ஹசன் 51 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியைப் பொறுத்த வரையி ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
IND vs BAN: வைடா நோ நோ நீ விளையாடு நான் பாக்குறேன்னு வேடிக்கை பார்த்த நடுவர் ரிச்சர்டு கெட்டில்பரோ!
அதன் பிறகு விளையாடிய இந்திய அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 261 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், விராட் கோலி 97 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலமாக இந்தியா தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், இது போன்ற வெற்றியை தான் நாங்கள் பெற நினைத்தோம். ஆனால், பவுலிங்கில் மட்டுமே சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. ஆனால், மிடில் ஒவர்களில் வங்கதேச பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினர். பீல்டிங்கும் சிறப்பாக இருந்தது. பவுலிங் மற்றும் பீல்டிங் இரண்டிலும் ஜடேஜா சிறப்பாக செயல்பட்டார்.
சரவெடியாக வெடித்த இந்தியா – உலகக் கோப்பையில் 4ஆவது வெற்றி – புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம்!
சிறந்த பீல்டிங்கிற்கான வீரர்களுக்கு பதக்கம் கொடுப்பது அனைவருக்கும் சிறந்த உத்வேகத்தை கொத்துள்ளது. ஹர்திக் பாண்டியாவிற்கு பெரிதாக பாதிப்பு ஒன்றும் இல்லை. அவரது நிலையை அறிந்த பின்பு அதற்கேற்ப திட்டமிடுவோம். ரசிகர்கள் எங்கு சென்றாலும் எங்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
IND vs BAN: சிக்ஸர் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் 26000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை!