
புனே மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 17ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில், வங்கதேச அணி முதலில் விளையாடி 256 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 48 ரன்னிலும், சுப்மன் கில் 53 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பிறகு விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். ஒரு கட்டத்தில் விராட் கோலி 74 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது அவர் 3 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 26000 ரன்களை கடந்து சாதனை படைப்பார். அந்த நிலையில், கோலி சிக்ஸர் அடித்து அதிவேகமாக 26000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அதன் பிறகு விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக தேவைப்படும் போது ராகுல் சிங்கிள் வர மறுத்துள்ளார். விராட் கோலியும் அதற்கு அறிவுரை வழங்கியும், இல்லை இல்லை நீங்கள் சதம் அடித்தால் போதும் என்று கூறியிருக்கிறார்.
சரவெடியாக வெடித்த இந்தியா – உலகக் கோப்பையில் 4ஆவது வெற்றி – புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம்!
இதையடுத்து, கடைசில பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 40 ஓவர்களில் இந்தியா 249 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 92 ரன்கள் எடுத்திருந்தார். 41ஆவது ஓவரை ஹசன் மஹமது வீசினார். முதல் பந்தில் ரன் இல்லை, 2ஆவது பந்து வைடு, 2ஆவது பந்தில் 2 ரன்கள், 3 ஆவது பந்தில் ரன் இல்லை, 4ஆவது பந்தில் 2 ரன், 5ஆவது பந்தில் ரன் இல்லை, 6ஆவது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது.
IND vs BAN: சிக்ஸர் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் 26000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை!
கடைசியாக இந்திய அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. கோலி சதம் அடிக்க 3 ரன்கள் தேவைப்பட்டது. நசும் அகமது 42ஆவது ஓவரை வீசினார். அந்த ஓவரில் முதல் பந்தை நசும் அகமது, லெக் ஸைடு திசையில் வைடாக வீசினார். ஆனால், அதற்கு களத்தில் இருந்த நடுவர் ரிச்சர்டு கெட்டில்பரோ வைடு தரவில்லை. இதற்கு பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் விராட் கோலிக்காக இவ்வாறு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் பிறகு 2ஆவது பந்தில் ரன் எடுக்கவில்லை, 3ஆவது பந்தை விராட் கோலி சிக்ஸருக்கு தூக்கி அடிக்க, அவர் சதமும் அடித்தார், இந்திய அணி வெற்றியும் பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக இந்தியா தொடர்ந்து 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்தது.