India vs Bangladesh: 8 ஆண்டுகளுக்குப் பிறகு கோலி சதம், வங்கதேசத்திற்கு எதிராக 12 ஆண்டுகளுக்கு பிறகு சதம்!

Published : Oct 19, 2023, 11:14 PM IST
India vs Bangladesh: 8 ஆண்டுகளுக்குப் பிறகு கோலி சதம், வங்கதேசத்திற்கு எதிராக 12 ஆண்டுகளுக்கு பிறகு சதம்!

சுருக்கம்

புனேயில் நடந்த உலகக் கோப்பையின் 17ஆவது லீக் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக விராட் கோலி சதம் அடித்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கிரிக்கெட் உலகக் கோப்பையின் 17ஆவது லீக் போட்டியானது புனே மைதானத்தில் நடந்தது. இதில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 256 ரன்கள் குவித்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 66 ரன்களும், தன்ஷித் ஹசன் 51 ரன்களும், மஹ்முதுல்லா 46 ரன்களும் எடுத்தனர்.

சரவெடியாக வெடித்த இந்தியா – உலகக் கோப்பையில் 4ஆவது வெற்றி – புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம்!

இந்திய அணியின் பவுலர்களைப் பொறுத்த வரையில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பின்னர் ஆடிய இந்திய அணியில் ரோகித் சர்மா 48 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் உலகக் கோப்பையில் 2ஆவது போட்டியில் விளையாடிய சுப்மன் கில் உலகக் கோப்பையில் தனது முதல் அரைசதத்தை அடித்து 53 ரன்களில் வெளியேறினார்.

IND vs BAN: சிக்ஸர் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் 26000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை!

அதன் பிறகு விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடினர். பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் உலகக் கோப்பையில் அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்தப் போட்டியில் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து விராட் கோலியுடன், கேஎல் ராகுல் இணைந்தார்.

இதில், விராட் கோலி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர், தனக்கு கிடைத்த நோபால் வாய்ப்பில் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். ஒரு கட்டத்தில் விராட் கோலி 74 ரன்களாக இருந்த போது சிக்ஸர் அடித்ததன் மூலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 26000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர், 567 இன்னிங்ஸ் விளையாடி 26003 ரன்கள் குவித்தார். தொடர்ந்து விளையாடிய கோலி, கடைசியில் இந்திய அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவையிருந்த போது நசூம் அகமது வீசிய முதல் பந்தில் வைடு கொடுக்கப்படவில்லை. 2ஆவது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. 3ஆவது பந்தில் சிக்ஸர் அடிக்கவே விராட் கோலி சதம் அடித்து சாதனை படைத்தார். இந்திய அணியும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IND vs BAN: உலகக் கோப்பையில் முதல் அரைசதம் அடித்த சுப்மன் கில் – கை தட்டி ஆரவாரம் செய்த சாரா டெண்டுல்கர்!

இந்தப் போட்டியில் விராட் கோலி சதம் அடித்ததன் மூலமாக 8 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் விராட் கோலி சதம் விளாசியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு கடைசியாக உலகக் கோப்பையில் கோலி சதம் அடித்திருந்தார். மேலும், 12 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச அணிக்கு எதிராக 2ஆவது முறையாக உலகக் கோப்பையில் சதம் விளாசியுள்ளார். இதற்கு முன்னதாக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிராக விராட் கோலி 100 ரன்கள் (நாட் அவுட்) அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சேஸிங்கில் விராட் கோலி முதல் முறையாக இந்தப் போட்டியில் சதம் விளாசியுள்ளார்.

India vs Bangladesh: நானும் கேட்ச் பிடிச்சிட்டேன், பீல்டிங் பயிற்சியாளரிடம் பதக்கம் கேட்ட ரவீந்திர ஜடேஜா!

மேலும், இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக ஒரு நாள் போட்டிகளில் 48ஆவது சதத்தை பதிவு செய்தார். இன்னும் ஒரு சதம் அடித்தால் சச்சினின் சாதனையை சமன் செய்வார். அதோடு, சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் விராட் கோலி 78 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஒரு அணிக்கு எதிராக உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்தவர்கள்:

சச்சின் டெண்டுல்கர் – கென்யா – 2 சதங்கள்

சவுரவ் கங்குலி – கென்யா – 2 சதங்கள்

ரோகித் சர்மா – வங்கதேசம் – 2 சதங்கள்

விராட் கோலி – வங்கதேசம் – 2 சதங்கள்

IND vs BAN: அதிரடியாக விளையாடி கடைசி வரை ஆட்டம் காட்டிய வங்கதேச அணி – விக்கெட் எடுக்க போராடிய இந்தியா!

இந்திய அணிக்காக அதிக முறை உலகக் கோப்பையில் சதம் அடித்தவர்கள்:

ரோகித் சர்மா – 7

சச்சின் டெண்டுல்கர் – 6

சவுரவ் கங்குலி – 4

ஷிகர் தவான் – 3

விராட் கோலி – 3

உலகக் கோப்பையில் ரன் சேஸிங்கில் முதல் முறையாக விராட் கோலி சதம் விளாசியுள்ளார்.

215 கிமீ வேகத்தில் பறந்த ரோகித் சர்மா – 3 முறை வேகத்தை அளக்கும் கருவியில் சிக்கி அபராதம் விதிப்பு!

இந்திய மைதானங்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள்:

587 – விராட் கோலி – விசாகப்பட்டினம்

551 – விராட் கோலி – புனே

534 – சச்சின் டெண்டுல்கர் – பெங்களூரு

529 – சச்சின் டெண்டுல்கர் – குவாலியர்

496 – சச்சின் டெண்டுலகர் – கொல்கத்தா

ஒரு மைதானத்தில் ஒரு நாள் போட்டியில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த விராட் கோலி:

800 – மிர்பூர் மைதானம், டாக்கா

644 – பிரேமதாச மைதானம்

587 – விசாகப்பட்டினம்

571 – போர்ட் ஆஃப் ஸ்பெயின், டிரினிடாட்

551 – மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம், புனே

புனே மைதானத்தில் ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி அடித்த ரன்கள்:

61 ரன்கள் (85 பந்துகள்) - ஆஸ்திரேலியா – 2013

122 ரன்கள் (105 பந்துகள்) – இங்கிலாந்து – 2017

29 ரன்கள் (29 பந்துகள்) – நியூசிலாந்து – 2017

107 ரன்கள் (119 பந்துகள்) – வெஸ்ட் இண்டீஸ், 2018

56 ரன்கள் (60 பந்துகள்) – இங்கிலாந்து, 2021

66 ரன்கள் (79 பந்துகள்) – இங்கிலாந்து, 2021

7 ரன்கள் (10 பந்துகள்) – இங்கிலாந்து, 2021

103 ரன்கள் (97 பந்துகள்) – வங்கதேசம், 2023

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?