IND vs BAN: சிக்ஸர் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் 26000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை!

By Rsiva kumar  |  First Published Oct 19, 2023, 9:22 PM IST

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 80* ரன்கள் எடுத்ததன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 26003 ரன்களை கடந்த 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.


இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 17ஆவது லீக் போட்டி தற்போது புனே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்தது. இதில், லிட்டன் தாஸ் 66 ரன்னிலும், தன்ஷித் ஹசன் 51 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக மஹ்முதுல்லா 46 ரன்கள் குவித்தார்.

IND vs BAN: உலகக் கோப்பையில் முதல் அரைசதம் அடித்த சுப்மன் கில் – கை தட்டி ஆரவாரம் செய்த சாரா டெண்டுல்கர்!

Tap to resize

Latest Videos

பின்னர் கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு வழக்கம் போன்று ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர். ரோகித் சர்மா பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினார். ஒரு கட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா 40 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு விராட் கோலி களமிறங்கினார்.

ஒரு புறம் சுப்மன் கில் தனது முதல் உலகக் கோப்பையில் 2ஆவது போட்டியில் முதல் அரைசதம் அடித்துள்ளார். அவர் 53 ரன்களில் ஆட்டமிழந்து 14 ரன்களில் 2000 ரன்களை கடக்கும் சாதனையை கோட்டைவிட்டார். அதன் பிறகு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் சிக்ஸர் அடிக்க முயற்சித்து 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து கேஎல் ராகுல் களமிறங்கினார். கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து நிதானமாக ரன்கள் சேர்த்தனர்.

India vs Bangladesh: நானும் கேட்ச் பிடிச்சிட்டேன், பீல்டிங் பயிற்சியாளரிடம் பதக்கம் கேட்ட ரவீந்திர ஜடேஜா!

இதில் விராட் கோலிக்கு வீசப்பட்ட நோபாலில் சிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார். இந்தப் போட்டியை 25,923 ரன்களுடன் தொடங்கிய விராட் கோலி இந்தப் போட்டியில் 80 ரன்கள் சேர்த்ததன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் 26003 ரன்களை கடந்த 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் விராட் கோலி 35 ரன்கள் எடுத்ததன் மூலமாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேலா ஜெயவர்தனே சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்னதாக ஜெயவர்தனே 725 இன்னிங்ஸ் விளையாடி 25,957 ரன்கள் எடுத்திருந்தார். 

IND vs BAN: அதிரடியாக விளையாடி கடைசி வரை ஆட்டம் காட்டிய வங்கதேச அணி – விக்கெட் எடுக்க போராடிய இந்தியா!

தற்போது விராட் கோலி 567 இன்னிங்ஸ்களில் 26003* ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் ஜாம்பவான், மாஸ்டர் பிளாஸ்டர் 782 இன்னிங்ஸ் விளையாடி 34,357 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இலங்கையின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா 666 இன்னிங்ஸ் விளையாடி 28016 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் 668 இன்னிங்ஸ் விளையாடி 27483 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!