யாரை கழற்றிவிட்டு, யார சேர்த்திருக்காங்க தெரியுமா? உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

By Rsiva kumar  |  First Published Aug 7, 2023, 2:58 PM IST

உலகக் கோப்பை 2023 தொடருக்கான 18 பேர் கொண்ட உத்தேச ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் நடந்த 12 உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா 2 முறை சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. ஆனால், ஆஸ்திரேலியா மட்டும் இதுவரையில் 5 முறை சாம்பியன் வென்றுள்ளது.

கிடைத்த வாய்ப்பையும் கோட்டைவிடும் சஞ்சு சாம்சன்: உலகக் கோப்பை வாய்ப்பு அம்பேல்?

Tap to resize

Latest Videos

இதுவரையில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து தான் உலகக் கோப்பை தொடரை நடத்தியுள்ளது. ஆனால் முதல் முறையாக இந்தியா தனியாக உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான 13 ஆவது உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்குகிறது.

முதல் அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளுக்கு அர்ப்பணித்த திலக் வர்மா; வைரலாகும் வீடியோ!

இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து என்று 10 அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொடர் இந்தியா முழுவதும் 10 மைதானங்களில் நடக்கிறது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

தேசிய ஈட்டி எறிதல் தினம்: 1000க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டிக்கு ஏற்பாடு!

இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடரின் போட்டி அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. மைதான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பிசிசிஐ தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஸ்பின்னர்களுக்கு போட்ட ஸ்கெட்ச்: தானாக வந்து சிக்கிய இந்தியா- ரோவ்மன் பவல் டாக்!

இந்த நிலையில் உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அறிவித்துள்ள 18 பேர் கொண்ட அணியில் மார்னஸ் லபுஷேனுக்கு இடம் அளிக்கப்படவில்லை. ஆனால், அனுபவமில்லாத சிறந்த ஆல் ரவுண்டரான ஆரோன் ஹார்டி மற்றும் லெக் ஸ்பின்னரான தன்வீர் சங்கா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

ஆஸ்திரேலியா:

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சின் அப்பாட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் க்ரீன், ஆரோன் ஹார்டி, ஜோஸ் ஹசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா

உலகக் கோப்பை தொடரின் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள்ளாக அறிவிக்கப்பட இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.

 

Marnus Labuschagne has been dropped for World Cup 2023. pic.twitter.com/BjZdQdoQYv

— Johns. (@CricCrazyJohns)

 

உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில், ஆஸ்திரேலியா அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

WI vs IND 2nd T20: வானவேடிக்கை காட்டிய நிக்கோலஸ் பூரன்: பவுலர்கள் அடித்து கொடுக்க கடைசில வெற்றி பெற்ற வெ.இ!

click me!