முதல் அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளுக்கு அர்ப்பணித்த திலக் வர்மா; வைரலாகும் வீடியோ!

Published : Aug 07, 2023, 12:13 PM IST
முதல் அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளுக்கு அர்ப்பணித்த திலக் வர்மா; வைரலாகும் வீடியோ!

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் திலக் வர்மா அரைசதம் அடித்த நிலையில், அதனை ரோகித் சர்மாவின் மகளுக்கு அர்ப்பணித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நேற்று கயானாவில் நடந்தது. இதில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரியத் தொடங்கியது. எனினும், ஒருபுறம் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா சர்வதேச டி20 போட்டியில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அவர் 41 பந்துகளில் ஒரு சிக்சர் 5 பவுண்டரிகள் உள்பட 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தேசிய ஈட்டி எறிதல் தினம்: 1000க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டிக்கு ஏற்பாடு!

அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் வித்தியாசமான முறையில் இரு கட்டை விரல்களையும் மாற்றி மாற்றி காண்பித்து குழந்தையை போல் கொண்டாடினார். இந்தப் போட்டியில் இந்தியா 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் போட்டிக்குப் பிறகு பேசிய திலக் வர்மா கூறியிருப்பதாவது: இந்த அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளான சமைராவுக்கு நான் அர்ப்பணிக்கிறேன். அதற்காகத்தான் வித்தியாசமான முறையில் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன்.

ஸ்பின்னர்களுக்கு போட்ட ஸ்கெட்ச்: தானாக வந்து சிக்கிய இந்தியா- ரோவ்மன் பவல் டாக்!

நாங்கள் இருவரும் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். ஆதலால், நான் எனது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எப்போது அரைசதம் அடிக்கிறேனோ அதனை சமைராவுக்கு அர்ப்பணிப்பதாக சொல்லியிருந்தேன். அதன்படியே செய்தேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ரோகித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் எனது ரோல் மாடல். இப்போது இல்லை, ஐபிஎல் முதல் சீசனிலேயெ நான் ரோகித் சர்மாவுடன் அதிக நேரம் பேசியிருக்கிறேன். அப்போதே 3 வடிவத்திற்கான வீரர் என்ற நம்பிக்கை கொடுப்பார் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

WI vs IND 2nd T20: வானவேடிக்கை காட்டிய நிக்கோலஸ் பூரன்: பவுலர்கள் அடித்து கொடுக்க கடைசில வெற்றி பெற்ற வெ.இ!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஆர்சிபி ரசிகர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. பெங்களூரு சின்னசாமியில் ரன் மழைக்கு ரெடியா? குட் நியூஸ்!
விராட் கோலி vs ரோஹித் சர்மா: இந்தூர் ஒருநாள் போட்டியின் கிங் யார்?