தேசிய ஈட்டி எறிதல் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் பங்கேற்கும் விதமாக ஈட்டி எறிதல் போட்டிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தடகள கூட்டமைப்பு தலைவர் அடில் ஜே. சுமாரிவல்லா கூறியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவை பறைசாற்றும் வகையில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். இதன் காரணமாக இந்திய தடகள கூட்டமைப்பு ஆகஸ்ட் 7 ஆம் தேதியை தேசிய ஈட்டி எறிதல் தினமாக அறிவித்தது.
ஸ்பின்னர்களுக்கு போட்ட ஸ்கெட்ச்: தானாக வந்து சிக்கிய இந்தியா- ரோவ்மன் பவல் டாக்!
அதன்படி இன்று நாடு முழுவதும் தேசிய ஈட்டி எறிதல் தினம் சிறப்பாக கொண்டாட்ப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய ஈட்டி எறிதல் தினமான இன்று, மாநிலம் மற்றும் மாவட்டம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் பங்கேற்கும் வகையில் ஈட்டி எறிதல் போட்டிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தடகள கூட்டமைப்பு தலைவர் அடில் சுமாரிவல்லா வீடியோ மூலமாக தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள தடகள வீரர்கள் அனைவரும் இந்த ஈட்டி எறிதல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய ஈட்டி எறிதல் தினம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று இந்திய தடகள கூட்டமைப்பின் தேசிய தலைவர் அடில் சுமரிவாலா அறிவித்துள்ளார். இதே நாளில்தான் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். | | | | … pic.twitter.com/22PoFw5kNS
— Asianetnews Tamil (@AsianetNewsTM)