பாக்ஸிங் டே டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்காவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா

By karthikeyan VFirst Published Dec 29, 2022, 2:19 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது. 
 

தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடந்தது. பாக்ஸிங் டே டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஸ்காட் போலந்த்.

IPL 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்..! கேப்டன் யார்..?

தென்னாப்பிரிக்க அணி: 

டீன் எல்கர் (கேப்டன்), சாரெல் எர்வீ, தியூனிஸ் டி பிருய்ன், டெம்பா பவுமா, காயா ஜோண்டோ, கைல் வெரெய்ன் (விக்கெட் கீப்பர்), மார்கோ யான்சென், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி. 

முதலில் பேட்டிங்  ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி சார்பில் கேமரூன் க்ரீன் அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தினார். மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் அபாரமாக பேட்டிங் ஆடி இரட்டை சதமடித்தார். தனது 100வது டெஸ்ட்டில் இரட்டை சதமடித்து சாதனை படைத்தார் வார்னர். ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக பேட்டிங்  ஆடி 85 ரன்களை குவித்து, 15 ரன்னில் சதத்தை தவறவிட்டார். டிராவிஸ் ஹெட் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகிய இருவரும் தலா 51 ரன்கள் அடித்தனர். பின்வரிசையில் அலெக்ஸ் கேரி அபாரமாக ஆடி சதம் விளாசினார். அலெக்ஸ் கேரி 111  ரன்களை குவிக்க, முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 575 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

கோலியை அதிகமுறை வீழ்த்திய பவுலர்; ஐபிஎல்லில் அபாரமான சாதனைகளுக்கு சொந்தக்கார பவுலர்! ஏலத்தில் விலைபோகாத கொடுமை

386 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியில் டெம்பா பவுமா அதிகபட்சமாக 65 ரன்கள் அடித்தார். மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 2வது இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்க அணி.

இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என டெஸ்ட் தொடரை வென்றது.
 

click me!