இது என்ன பாகிஸ்தானுக்கு வந்த சோதனை: தெளிவா சொல்லுங்க யார் தான் கேப்டன்!

By Rsiva kumarFirst Published Dec 28, 2022, 2:11 PM IST
Highlights

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் உள்பட 2 வீரர்களுக்கு வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து கேப்டனுக்குப் பதிலாக முகமது ரிஸ்வான் சப்ஸ்டிடியூட் செய்தார்.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணி:

அப்துல்லா ஷாஃபிக், இமாம் உல் ஹக், ஷான் மசூத், பாபர் அசாம் (கேப்டன்), சௌத் ஷகீல், சர்ஃபராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், நௌமன் அலி, முகமது வாசிம், அப்ரார் அகமது, மிர் ஹம்ஸா.

நியூசிலாந்து அணி:

டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், டிம் சௌதி (கேப்டன்), இஷ் சோதி, நீல் வாக்னர், அஜாஸ் படேல்.

அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 161 ரன்களும், சர்ப்ராஸ் அகமது 86 ரன்களும், அகா சல்மான் 103 ரன்களும் எடுத்தனர்.

மெஸ்ஸி அனுப்பிய ஜெர்ஸியை அணிந்து கொண்ட தோனி மகள்: வைரலாகும் புகைப்படம்!

பந்துவீச்சில் டிம் சௌதி 3 விக்கெட்டுகளும், அஜாஸ் படேல், பிரேஸ்வெல், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், வாக்னர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டாம் லாதம் 113 ரன்களும், டெவான் கான்வே 92 ரன்களும் எடுத்தனர். தற்போது வரை நியூசிலாந்து அணி 82 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்துள்ளது.

ஷிகர் தவான் சேப்டர் குளோஸா? இலங்கை தொடரில் நீக்கப்பட்டது ஏன்?

இந்த நிலையில், 3 ஆம் நாளான இன்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் உள்பட ஷான் மசூத் மற்றும் அகா சல்மான் ஆகியோருக்கு வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மூவரும் இன்றைய ஆட்டத்திற்கு வரவில்லை. மாறாக டெஸ்ட் அணியில் இடம்பிடிக்காத முகமது ரிஸ்வான், பாபர் அசாமிற்குப் பதிலாக பீல்டிங் செய்ய வந்தார். அப்படி பீல்டிங் செய்ய வந்தவர், கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டு மைதானத்தில் பீல்டர்களை சரி செய்தார்.

டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் இல்லை: டுவிட்டரில் கருத்து பதிவிட்ட ஹர்ஷா போக்ளே!

ஆனால், விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த சர்ப்ராஸ் அகமது தான் ரெவியூ கேட்டார். போட்டியின் 53ஆவது ஓவரை நௌமான் அலி வீசினார். பந்து டெவோன் கான்வேயின் பேடில் படவே, அம்பயர் நாட் அவுட் கொடுத்துவிட்டார். இதற்கு உடனே சர்ப்ராஸ் அகமது ரெவியூ கேட்கவே, தெளிவாக அவுட் வரவே, அம்பயரின் முடிவு மாற்றித் தரப்பட்டது. கிரிக்கெட் விதிகளின்படி, சப்ஸ்டிடியூட்டாக வரும் ஒருவர் பௌலிங்கும் வீசக் கூடாது, கேப்டனாகவும் செயல்படக் கூடாது. ஆனால், விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு சர்ப்ராஸ் அகமது தான் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ரிஸ்வான் கிடையாது என்று தெளிவாக கூறப்பட்டது. 

நீங்க இந்த ஸ்கோர அடிச்சா போதும்: ஆஸ்திரேலியா 575 எடுத்து டிக்ளேர்!

click me!