டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய கேமரூன் கிரீன்!

By Rsiva kumarFirst Published Dec 28, 2022, 3:28 PM IST
Highlights

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணியின் சிறந்த ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. தற்போது இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 189 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி சாரிபில் கிரீன் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஸ்டார்க் 2 விக்கெட்டும், லையன், போலண்டு ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இது என்ன பாகிஸ்தானுக்கு வந்த சோதனை: தெளிவா சொல்லுங்க யார் தான் கேப்டன்!

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 575 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில், டேவிட் வார்னர் 200 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களும், ஹெட் 51 ரன்களும், கிரீன் 51 ரன்களும், அலெக்ஸ் கேரே 111 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் நோர்ட்ஜே 3 விக்கெட்டுகளும், ரபாடா 2 விக்கெட்டும், நிகிடி மற்றும் ஜான்சென் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

மெஸ்ஸி அனுப்பிய ஜெர்ஸியை அணிந்து கொண்ட தோனி மகள்: வைரலாகும் புகைப்படம்!

இந்த நிலையில், ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிரீன் கையில் ஏற்பட்ட முறிவு காரணமாக சிட்னி டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறினார். அதுமட்டுமின்றி மெல்போர்ன் டெஸ்ட் தொடரிலும் அவரால் இனி பந்து வீச முடியாது. இரு அணிகளுக்கு இடையிலான 2ஆம் நாள் போட்டியின் போது நோர்ட்ஜே வீசிய பந்து அவரது கையை பதம் பார்க்கவே 23 வயதே ஆன கேமரூன் கிரீன் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் நடையை கட்டினார். அவருக்குப் பதிலாக ஆரோன் ஹார்டி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஷிகர் தவான் சேப்டர் குளோஸா? இலங்கை தொடரில் நீக்கப்பட்டது ஏன்?

வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்று இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கிரீன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் இல்லை: டுவிட்டரில் கருத்து பதிவிட்ட ஹர்ஷா போக்ளே!

click me!