
நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 24ஆவது லீக் போட்டி தற்போது டெல்லியில் நடந்து முடிந்துள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு அதிகபட்சமாக 399 ரன்கள் குவித்தது. இதில், டேவிட் வார்னர் 104 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள், மார்னஷ் லபுஷேன் 62 ரன்கள், கிளென் மேக்ஸ்வெல் 106 ரன்கள் எடுத்தனர். இவர்களது சிறப்பான பேட்டிங்கால் ஆஸ்திரேலியா 399 ரன்கள் குவித்தது.
பின்னர் கடின இலக்கை துரத்திய நெதர்லாந்து அணிக்கு களமிறங்கிய ஒவ்வொரு வீரரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில் அதிகபடச் ஸ்கோரே 25 ரன்கள் தான். தொடக்க வீரர் விக்ரஜித் சிங் 25 ரன்கள் எடுத்தார். மேக்ஸ் ஓடவுட் 6, கொலின் அக்கர்மேன் 10, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 11, பாஸ் டி லீட் 4, தேஜா நிதமனுரு 14, லோகன் வான் பீக் 0, ரோலாஃப் வான் டெர் மெர்வே 0, ஆர்யன் தத் 1, பால் வான் மீகரென் 0 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 12 ரன்கள் (நாட் அவுட்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக நெதர்லாந்து 21 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்து 309 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சைப் பொறுத்த வரையில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளும், மிட்செல் மார்ஷ் 2 விக்கெடும், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசல்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆஸ்திரேலியா விளையாடிய 5 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.
மேலும், இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசம்:
317 ரன்கள் - இந்தியா – இலங்கை – திருவனந்தபுரம், 2023
309 ரன்கள் – ஆஸ்திரேலியா – நெதர்லாந்து – டெல்லி, 2023
304 ரன்கள் – ஜிம்பாப்வே – யுஏஇ – ஹராரே, 2023
290 ரன்கள் – நியூசிலாந்து – அயர்லாந்து – அபெர்டீன், 2008
275 ரன்கள் – ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் – பெர்த், 2015 (உலகக் கோப்பை)
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தொடர்ந்து 3ஆவது முறையாக 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆஸி வீரர்கள்:
3 முறை – ஆடம் ஜம்பா, 2023
2 – கேரி கில்மர், 1975
2 – ஷேன் வார்னே, 1999
2 – மிட்செல் ஜான்சன், 2011
2 – பிரெட் லீ, 2011
2 – மிட்செல் ஸ்டார்க், 2019
உலகக் கோப்பைகளில் அதிக பந்துவீச்சாளர்களை வெளியேற்றிய பந்து வீச்சாளர்கள்:
25 – மிட்செல் ஸ்டார்க்
25 – வாசீம் அக்ரம்
18 – லசித் மலிங்கா
17 – முத்தையா முரளிதரன்
15 – கிளென் மெக்ராத்
உலகக் கோப்பை ஒரு நாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள்:
71 – கிளென் மெக்ராத் (39 போட்டி)
68 – முத்தையா முரளிதரன் (40 போட்டி)
56 – மிட்செல் ஸ்டார்க் (23 போட்டி)
56 – லசித் மலிங்கா (29 போட்டி)
55 – வாசீம் அக்ரம் (38 போட்டி)
அதிக முறை 4 விக்கெட்டுகள் எடுத்த ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் ஒரு நாள் போட்டி:
13 – ஷேன் வார்னே
12 – ஆடம் ஜம்பா
இந்த உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் ஆடம் ஜம்பா 13 விக்கெட்டுகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
2023 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள்:
ஆடம் ஜம்பா – 13 விக்கெட்டுகள் (5 போட்டிகள்)
மிட்செல் சான்ட்னர் – 12 விக்கெட்டுகள் (5 போட்டிகள்)
ஜஸ்ப்ரித் பும்ரா – 11 விக்கெட்டுகள் (5 போட்டிகள்)
தில்ஷன் மதுஷங்கா – 11 விக்கெட்டுகள் (4 போட்டிகள்)
மேட் ஹென்றி – 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்)