வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 43ஆவது லீக் போட்டி புனே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய வங்கதேச அணியானது, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் குவித்தது. இந்த உலகக் கோப்பையில் வங்கதேச அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மேலும், இந்தப் போட்டியில் அதிகபட்சமாக தவ்ஹித் ஹிரிடோய் 74 ரன்கள் குவித்தார்.
வெற்றியோடு வீரநடை போட்ட நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - பாகிஸ்தான் 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி!
பின்னர் கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு மிட்செல் மார்ஷ் களமிறங்கினார். அவர், அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். மார்ஷ் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது அவரது 19ஆவது ஒரு நாள் போட்டி சதம் ஆகும். டேவிட் வார்னர் ஒரு நாள் போட்டிகளில் 33ஆவது அரைசதம் அடித்து 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.
எம்.எஸ்.தோனி குளோபல் ஸ்கூல்: 2024ல் சென்னையில் ஸ்கூல் திறக்கும் எம்.எஸ்.தோனி!
இவரைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார். மார்ஷ் மற்றும் ஸ்மித் இருவரும் அதிரடியாகவே விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், மார்ஷ் 89 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலமாக இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணியில் 7 முறை சதம் அடிக்கப்பட்டுள்ளது. 2007 உலகக் கோப்பையில் 6 சதங்களும், 2019 ஆம் ஆண்டு 5 சதங்களும் அடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விளையாடிய மிட்செல் மார்ஷ் 117 பந்துகளில் 150 ரன்கள் அடித்தார். இதே போன்று இந்தப் போட்டியில் ஸ்மித் 55 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலமாக உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்காக 11 முறை ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் அடித்துள்ளார். இறுதியாக ஆஸ்திரேலியா 44.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
England vs Pakistan: பாகிஸ்தானின் அரையிறுதி கனவு நிறைவேறுமா? 6.4 ஓவர்களில் 337 ரன்கள் இலக்கு!
இதில் மார்ஷ் 132 பந்துகளில் 17 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் உள்பட 177 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்மித் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியின் மூலமாக வங்கதேச அணிக்கு எதிராக 2ஆவது அதிகபட்ச ஸ்கோராக 307 ரன்களை சேஸ் செய்துள்ளது. இதற்கு முன்னதாக வங்கதேச அணிக்கு எதிராக பாகிஸ்தான் 327 ரன்களை சேஸ் செய்துள்ளது.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 16ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான உலகக் கோப்பையின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
Pakistan vs England: அரையிறுதி வாய்ப்பை இழந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான்!