பாகிஸ்தானுக்கு எதிரான 44ஆவது போட்டியில் இங்கிலாந்து 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து மற்று பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பையின் 44ஆவது லீக் போட்டி கொல்கத்தாவில் இன்று நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் குவித்தது. இதில், பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். ஜோ ரூட் 60 ரன்கள் சேர்த்தார். பின்னர் கடின இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு 6.4 ஓவர்களில் 337 ரன்கள் எடுத்தால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் 6.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக அரையிறுதி வாய்ப்பை இழந்து பாகிஸ்தான் வெளியேறியது.
எம்.எஸ்.தோனி குளோபல் ஸ்கூல்: 2024ல் சென்னையில் ஸ்கூல் திறக்கும் எம்.எஸ்.தோனி!
மேலும், நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பு பெற்றது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷபீக் 0, ஃபகர் ஜமான் 1 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்தவர்கள் பாபர் அசாம் 38, முகமது ரிஸ்வான் 36 என்று ஓரளவு தாக்குப்பிடித்தனர். சவுதி சகீல் 29 ரன்களில் ஆட்டமிழக்க, அகா சல்மான் மட்டும் பொறுமையாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 51 ரன்களில் ஆட்டமிழக்க, ஷாகீன் அஃப்ரிடி மற்றும் ஹரீஷ் ராஃப் இருவரும் தங்களது பங்கிற்கு சரமாரியாக சிக்ஸர் விளாசினர்.
அஃப்ரிடி 25 ரன்கள் சேர்க்க, ஹரிஷ் ராஃப் 25 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கடைசியாக 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் 244 ரன்கள் மட்டுமே எடுத்து 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஈடன் கார்டன் மைதானத்தில் 8 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு இது இரண்டாவது தோல்வியாகும். மேலும், 4 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இதற்கு முன்னதாக 2019 உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக டக் ஒர்த் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியிருந்தது.
England vs Pakistan: பாகிஸ்தானின் அரையிறுதி கனவு நிறைவேறுமா? 6.4 ஓவர்களில் 337 ரன்கள் இலக்கு!
இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதன் மூலமாக 2025 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் இங்கிலாந்து அணியில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளை கைப்பற்றவே, அடில் ரஷீத், கஸ் அட்கின்சன் மற்றும் மொயீன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Pakistan vs England: அரையிறுதி வாய்ப்பை இழந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான்!