வரும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எம்.எஸ்.தோனி குளோபல் ஸ்கூல் என்ற பெயரில் சென்னையில் புதிய ஸ்கூல் ஒன்றை தோனி திறக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிம் ராஞ்சியில் பிறந்து வளர்ந்தவர் மகேந்திர சிங் தோனி. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்களை வென்று கொடுத்தார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை டிராபி பெற்றுக் கொடுத்துள்ளார்.
கிரிக்கெட் வாழ்க்கைத் தவிர, செவன், சென்னையின் எஃப்சி, ராஞ்சி ரேஸ், மஹி ரேஸிங் டீம் இந்தியா, ரித்தி குரூப், கதா புக், மஹி ஹோட்டல், தோனி எண்டர்டெயின்மெண்ட் என்று பல நிறுவனங்கள் மூலமாக வருமானம் ஈட்டி வருகிறார். விரைவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Pakistan vs England: அரையிறுதி வாய்ப்பை இழந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான்!
இந்த நிலையில் தான் சென்னையில் புதிதாக பள்ளிக்கூடம் ஒன்றை திறக்க உள்ளார். எம்.எஸ்.தோனி குளோபல் ஸ்கூல் என்ற பெயரில் பள்ளிக்கூடம் திறக்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. வரும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எம்.எஸ்.தோனி குளோபல் ஸ்கூல் என்ற பெயரில் பள்ளிக்கூடத்தை திறக்க இருக்கிறார். இதற்கு முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கசவகட்டா பகுதியில் எம்.எஸ்.தோனி குளோபல் ஸ்கூல் என்ற பெயரில் பள்ளிக்கூடத்தை திறந்துள்ளார். அதோடு, அந்தப் பள்ளியில் 4 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட புதிய கிரிக்கெட் மைதானத்தையும் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
England vs Pakistan: பாகிஸ்தானின் அரையிறுதி கனவு நிறைவேறுமா? 6.4 ஓவர்களில் 337 ரன்கள் இலக்கு!
MS Dhoni's Global school in Chennai now will open from August 2024. pic.twitter.com/pCrNV6H3kT
— CricketMAN2 (@ImTanujSingh)