இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 8ஆவது முறையாக ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றியது.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான ஆசிய கோப்பை இறுதிப் போட்டி இன்று கொழும்புவில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணிக்கு அடி மேல் அடிதான். ஜஸ்ப்ரித் பும்ரா பிள்ளையார் சுழி போட்டு முதல் விக்கெட் எடுக்க, அடுத்து வந்த முகமது சிராஜ் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அதன் பிறகு 2 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். பும்ரா, சிராஜ் வழியை பின்பற்றி ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இறுதியாக இலங்கை 50 ரன்கள் மட்டுமே எடுத்து. பின்னர், எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அணியை வெற்றி பெறச் செய்தனர்.
இதன் மூலமாக இந்தியா 8ஆவது முறையாக ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றியது. மேலும், ரோகித் சர்மா 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றி கொடுத்தார். இந்த நிலையில், இலங்கைக்கு எதிராக பிரம்மாண்டமான வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு சினிமா பிரபலங்களான மோகன்லால், நிதின், மகேஷ் பாபு, வெங்கடேஷ் ஆகியோர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sri Lanka vs India: 5 ஆயிரம் டாலர் பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய முகமது சிராஜ்!
இந்த நிலையில், 8ஆவது முறையாக சாம்பியனான இந்திய அணியில் முகமது சிராஜிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
யார் யாருக்கு என்னென்ன விருது வழங்கப்பட்டது?
ரவீந்திர ஜடேஜா:
முகமது சிராஜ் ஓவரில் இலங்கை வீரர் பதும் நிசாங்கா அடித்த பந்தை டைவ் அடித்து ரவீந்திர ஜடேஜா கேட்ச் பிடித்த நிலையில், ஜடேஜாவிற்கு கேட்ச் ஆஃப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது. மேலும், 3000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 249271.05) பரிசாக வழங்கப்பட்டது.
ஆட்டநாயகன் விருது – முகமது சிராஜ்:
இலங்கைக்கு எதிரான இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆதலால், சிராஜிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதில், அவருக்கு கிடைத்த பரிசுத் தொகையான 5 ஆயிரம் டாலரை (இந்திய மதிப்பி ரூ. 415451.75) மைதான ஊழியர்களுக்கு வழங்குவதாக அறிவித்தார். ஆனால், இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மைதான ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Sri Lanka vs India: 24 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையை பழி தீர்த்த இந்தியா; கங்குலி ஹேப்பி அண்ணாச்சி!
தொடர் நாயகன் விருது – குல்தீப் யாதவ்:
ஆசிய கோப்பை தொடரில் 5 போட்டிகளில் 4 இன்னிங்ஸில் விளையாடிய குல்தீப் யாதவ் 9 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். ஆதலால், குல்தீப் யாதவ்விற்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இதில், அவருக்கு 15 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 1246355.25) பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
மைதான ஊழியர்களுக்கு பரிசுத் தொகை:
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் வெற்றிகரமாக முடிந்தததற்கு மைதான ஊழியர்களும் ஒரு முக்கிய காரணம். கன மழையால் போட்டிகள் பாதிக்கப்படாமல் நடந்ததற்கு அவர்களது கடின உழைப்பே ஒரு முக்கிய காரணம். ஒரு போட்டியில் கூட ரோகித் சர்மா மைதான ஊழியர்களை பாராட்டி ஒட்டு மொத்த அணி சார்பாகவும் நன்றி தெரிவித்திருந்தார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பாக அவர்களுக்கு 50 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 4154517.50) பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
ஆசிய கோப்பை 2023, 2ஆவது இடம் பிடித்த இலங்கை:
ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. இதுவரையில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை 7ஆவது முறையாக 2ஆவது இடம் பிடித்துள்ளது. இலங்கை அணிக்கு பரிசுத் தொகையாக 75 ஆயிரம் டாலர் வழங்கப்பட்டது.
சிராஜின் சிறப்பான பந்துவீச்சு இது. பேட்டர்களுக்கு இது ஒரு நல்ல ஆடுகளமாக இருக்கும் என்று நான் நினைத்தேன், ஆனால் மேகமூட்டமான சூழ்நிலைகள் ஒரு பங்கைக் கொண்டிருந்தன. சுழலுக்கு எதிராக சதீரா மற்றும் குசால் பேட்டிங் செய்த விதம், அசலங்கா பேட்டிங் செய்த விதம். இந்த மூவரும் இந்தியாவில் நல்ல பேட்டிங் சூழ்நிலையில் அதிக ரன்களை குவிப்பார்கள். கடினமான சூழ்நிலைகளில் இருந்து எப்படி மீள்வது என்பது எங்களுக்குத் தெரியும்.
நல்ல அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்தோம். இது ஒரு பெரிய பிளஸ். கடந்த இரண்டு வருடங்களாக வீரர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். ஆதரவளித்த ஆதரவாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் உங்களை ஏமாற்றியதற்கு மன்னிக்கவும். இன்னும் பெரிய ஆதரவுக்கு நன்றி. இந்திய அணிக்கு வாழ்த்துகள்" என்று இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா தெரிவித்துள்ளார்.
இந்தியா சாம்பியன், ஆசிய கோப்பை டிராபி:
இறுதியாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் ஆசிய கோப்பை டிராபியை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா வழங்கினார். மேலும், பரிசுத் தொகையாக 1,50, 000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 12463552.50) வழங்கப்பட்டது.
Blue Brigade Dominates: Asia Cup Conquered! 💙🇮🇳 pic.twitter.com/bQbfag0JOo
— AsianCricketCouncil (@ACCMedia1)