இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றுப் போட்டி வரும் 10 ஆம் தேதி கொழும்புவில் நடக்க உள்ள நிலையில், இந்திய வீரர்கள் கொழும்புவிற்கு வந்துள்ளனர்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிந்த நிலையில், இன்று முதல் சூப்பர் 4 சுற்றுப் போட்டி நடக்க இருக்கிறது. இதில், வங்கதேச அணியும், பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. ஆசிய கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள் அணியை வீழ்த்தியது.
இதையடுத்து நடந்த போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால், அதன் பிறகு பாகிஸ்தான் பேட்டிங் ஆட வரவில்லை. மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இதன் மூலமாக 3 புள்ளிகள் பெற்று பாகிஸ்தான் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. இதே போன்று இந்தியா தனது 2ஆவது போட்டியில் நேபாள் அணியை வீழ்த்தி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. நேபாள் தொடரிலிருந்து வெளியேறியது.
நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில், சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற ஆப்கானிஸ்தான் அணிக்கு கடைசியாக ஒரு பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. கையில் ஒரேயொரு விக்கெட் மட்டுமே இருந்தது. ஆனால், கடைசியில் அந்த விக்கெட்டும் விழவே ஆப்கானிஸ்தான் 2 ரன்களில் தோல்வி அடைந்து ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இதன் காரணமாக குரூப் பி பிரிவில் உள்ள இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. இதில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கு இடையில் இதுவரையில் நடந்த 32 ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தான் 32 போட்டிகளிலும் வங்கதேச அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஹோம் மைதானத்தில் நடந்த போட்டிகளில் 11 ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்கிறது. வங்கதேச அணி 3 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அவே மைதானத்தில் நடந்த 14 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், வங்கதேச அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.
Afghanistan vs Sri Lanka: குசால் மெண்டிஸ் அதிரடியால் இலங்கை 291 ரன்கள் குவிப்பு!
இதே போன்று நடுநிலையான மைதானத்தில் நடந்த போட்டிகளில் பாகிஸ்தான் 7 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. வங்கதேச அணி 2 போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில், இன்றைய முதல் சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. வரும் 10 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்காக இந்திய வீரர்கள் தற்போது கொழும்புவிற்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கையில் கொழும்புவில் கன மழை எதிரொளி காரணமாக சூப்பர் 4 சுற்று போட்டியானது வேறொரு மைதானத்திற்கு மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
Bharat: இந்திய அணியின் ஜெர்சியில் பாரத் என்று பயன்படுத்த வேஎண்டும் – பிசிசிஐக்கு சேவாக் கோரிக்கை!
VIDEO | Indian cricket team arrives in Colombo, Sri Lanka for . pic.twitter.com/E9AYfWsZv4
— Press Trust of India (@PTI_News)