உலகக் கோப்பை 2023 தொடருக்கான டிக்கெட் விற்பனை முடிந்து விட்ட நிலையில் கள்ளச்சந்தையில் இந்தியா போட்டிக்கான டிக்கெட்டானது ரூ.57 லட்சம் வரையில் விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா நடத்தும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் இந்த தொடரில் இடம் பெற்று விளையாடுகின்றன. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்பட 10 மைதானங்களில் இந்த தொடர் நடத்தப்படுகிறது.
உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனையானது கடந்த 3 ஆம் தேதியுடன் முடிந்தது. டிக்கெட் விற்பனைக்கு பிசிசிஐ தான் பொறுப்பேற்று உள்ளது. ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட டிக்கெட் பிரச்சனை உலகக் கோப்பை தொடரில் ஏற்படக் கூடாது என்பதற்காக பிசிசிஐ பொறுப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், உலகக் கோப்பைக்கான இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையானது தொடங்கப்பட்டு சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், தான் கடந்த 4 ஆம் தேதி முதல் மூன்றாம் நபர் டிக்கெட் விற்கும் தளங்களில் உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்கப்படுகிறது என்று தகவல் வெளியானது. அதன்படி, viagogo என்ற தளத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் 19 லட்சத்திற்கு விற்கப்படுவதாக தகவல் வெளியானது. மற்ற போட்டிகளுக்கும் 30 ஆயிரம் முதல் 9 லட்சம் வரையில் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Afghanistan vs Sri Lanka: குசால் மெண்டிஸ் அதிரடியால் இலங்கை 291 ரன்கள் குவிப்பு!
இது குறித்து அறிந்து எப்படியாவது டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என்பதற்காகவே ரசிகர்கள் அந்த தளத்திற்கு சென்றனர். அதன் காரணமாக டிக்கெட் விலை மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. சில நேரத்திற்குள்ளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விலை மட்டும் ரூ.57 லட்சம் வரையில் உயர்ந்துள்ளது. எப்படி மூன்றாம் நபர் இணையதளத்திற்உ இத்தனை டிக்கெட்டுகள் கிடைத்தன என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் தான் அதனை அந்த தளத்தில் விற்பதாக தகவல் வெளியானாலும், எப்படி ஒரே நாளில் 100க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டிய பிசிசிஐ தற்போது மௌனமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bharat: இந்திய அணியின் ஜெர்சியில் பாரத் என்று பயன்படுத்த வேஎண்டும் – பிசிசிஐக்கு சேவாக் கோரிக்கை!