உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறாவிட்டாலும், ஹோம் உலகக் கோப்பை எப்போதுமே சிறந்தது, அதை வீட்டிற்கு கொண்டு வர இந்திய வீரர்களுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா நடத்தும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டியானது வரும் அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.
இந்த நிலையில், தான் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆதலால், தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், ஆசிய கோப்பை தொடரில் பேக்கப் வீரராக இடம் பெற்றிருந்த சஞ்சு சாம்சன், பிரஷித் கிருஷ்ணா ஆகியோரும் இடம் பெறவில்லை.
Afghanistan vs Sri Lanka: குசால் மெண்டிஸ் அதிரடியால் இலங்கை 291 ரன்கள் குவிப்பு!
இவர்களது வரிசையில் யுஸ்வேந்திர சஹாலும் இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே ஆசிய கோப்பை தொடரில் அவர் இடம்பெறவில்லை. ஆதலால், உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், குல்தீப் யாதவ் அணியில் இடம் பெற்றுள்ளார். ஆல் ரவுண்டர்களான அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின், பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால், இறுதிப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறவில்லை. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அஸ்வின் இடம் பெறவில்லை. எனினும் இதில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
Bharat: இந்திய அணியின் ஜெர்சியில் பாரத் என்று பயன்படுத்த வேஎண்டும் – பிசிசிஐக்கு சேவாக் கோரிக்கை!
ரவிச்சந்திரன் அஸ்வின் இடது கை பேட்ஸ்மேனுக்கு எதிராக சிறப்பாக செயல்படக் கூடியவர். ஒவ்வொரு அணியிலும் 3 அல்லது 4க்கும் அதிகமான இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்கு எதிராக அஸ்வின் சிறப்பாக பந்து வீசக் கூடியவர்.
ஏற்கனவே இடது கை பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் அணியிலிருக்கும் நிலையில், மூன்றாவது இடது கை பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளரான அக்ஷர் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அணியில் சிறந்த ஆல் ரவுண்டர் இருக்க வேண்டும் என்பதால், அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், ரவிச்சந்திரன் அஸ்வின் இக்கட்டான சூழலிலும் கூட சிறப்பாக பந்து வீசும் சிறந்த ஆல் ரவுண்டர். பவர் பிளேயிலும் சிறப்பாக பந்து வீசுபவர். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 5 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேஎல் ராகுல், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல் ஏன் இடம் பெற்றார்கள்? அஜித் அகர்கர் விளக்கம்!
இந்த நிலையில் தான் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தான் இடம் பெறாவிட்டாலும் கூட ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹோம் உலகக் கோப்பை எப்போதுமே சிறப்பு வாய்ந்தது, அதை வீட்டிற்குக் கொண்டு வர (நாம் அனைவரும்) நன்றாக விளையாடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Go well boys!
Home World Cup is always special and let’s ( all of us ) back them to bring it home🏆🏆 https://t.co/YUyvfXEQ3p