Fact Check: டிராபிக்குப் பதிலாக ஸ்டூல் மேல் கால் போட்டு இருக்கும் மிட்செல் மார்ஷின் எடிட் செய்த போட்டோ வைரல்!

By Rsiva kumar  |  First Published Nov 28, 2023, 1:24 PM IST

உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 6ஆவது முறையாக சாம்பியனான நிலையில் மிட்செல் மார்ஷ் டிராபி மீது கால் போட்டு அமர்ந்திருந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி கடந்த 19 ஆம் தேதி நடந்தது. இதில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக, ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியனானது. இதையடுத்து, ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் டிராபி மீது கால் போட்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை ஆஸீ, கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

சிஎஸ்கே அணியை வழி நடத்த தோனிக்கு கிடைத்த வாய்ப்பு – 212 போட்டிகளில் 128 வெற்றி கொடுத்த கேப்டன்!

Latest Videos

undefined

ஒட்டு மொத்த உலகமே தலை மீது கொண்டாட வேண்டிய டிராபி மீது கால் போட்டி அமர்ந்திருந்த மார்ஷிற்கு கிரிக்கெட் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரையில் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். மேலும், பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், ஆர்டிஐ ஆர்வலர் பண்டிட் கேசவ், உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் நகரில் ஆஸ்திரேலியா ஆல் ரவுண்டர் மார்ஷ் மீது வழக்கு பதிவு செய்தார். இந்த புகாரின் நகலை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைப்பதாக கூறியிருந்தார். அதில், மார்ஷிற்கு இந்தியாவில் கிரிக்கெட் விளையாட தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

Sri Lanka Cricket Board: விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து ரோஷன் ரணசிங்கே அதிரடி நீக்கம்!

இந்த நிலையில் தான், தெலுங்கில் பேஸ்புக் பயனர் ஒருவர் பகிர்ந்த போஸ்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், உலகக் கோப்பை டிராபிக்குப் பதிலாக ஸ்டூல் ஒன்று எடிட் செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது. இது வைரலாகி வருகிறது. ஆனால், அந்த புகைப்படத்தை உன்னிப்பாக கவனித்தால், எடிட் செய்யப்பட்ட புகைப்படமான கொஞ்சம் மங்களாக தெரியும். ஸ்டூலுக்கு அடியில் கார்பெட் மற்றும் ஸ்டூல் என்று ஒவ்வொன்றும் ஃப்ளர் செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது.

Dubai Champions Trophy 2025: இந்தியா ஒத்து வரலனா துபாய் அல்லது ஹைப்ரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி 2025!

கடந்த சில தினங்களாக எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சில சினிமா பிரபலங்களின் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. ராஷ்மிகா மந்தனா, சாரா டெண்டுல்கர் என்று பலரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

IPL 2024: ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக விளையாடுவேன் – பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி விருப்பம்!

click me!