சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த எம்.எஸ்.தோனிக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக வரும் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் அறிவுறுத்தலின் படி, விடுவிக்கப்பட்ட மற்றும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், கே பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, அம்பத்தி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங் மற்றும் சிசாண்டா மகாளா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
Sri Lanka Cricket Board: விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து ரோஷன் ரணசிங்கே அதிரடி நீக்கம்!
தோனி, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, டெவான் கான்வே உள்பட 19 வீரர்களை சிஎஸ்கே தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலமாக சென்னை அணிக்கு பர்ஸ் தொகையாக ரூ.31.4 கோடி தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலமாக 3 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 6 இந்திய வீரர்கள் உள்பட மொத்தமாக 9 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர்.
தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:
எம்.எஸ்.தோனி (கேப்டன்), மொயீன் அலி, தீபக் சாகர், டெவான் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டால், முகேஷ் சவுத்ரி, மதீஷா பதிரனா, அஜின்க்யா ரகானே, ஷேக் ரஷீத், மிட்செல் சாண்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலாங்கி, மகீஷ் தீக்ஷனா.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், கே பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, அம்பத்தி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங் மற்றும் சிசாண்டா மகாளா
எம்.எஸ்.தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தக்க வைத்துக் கொண்டார். நடந்து முடிந்த 16ஆவது சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிபெற்று 5ஆவது முறையாக சாம்பியனானது. இதையடுத்து பேசிய தோனி, நான் ஓய்வு பெறுவதற்கு இது தான் சரியான நேரம். ஆனால், இந்த வருடத்தில் நான் எங்கு சென்றாலும் ரசிகர்கள் காட்டும் அன்பு, பாசத்திற்கு நன்றி என்று சொல்வது மிகவும் எளிதான ஒன்று தான்.
ஆனால், இன்னும் 9 மாதங்கள் நான் கடினமாக உழைக்க வேண்டுமே அது தான் எனக்கு கடினம். ஐபிஎல் தொடரில் விளையாடலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்க, 6-7 மாதங்கள் இருக்கிறது என்று தோனி கூறியிருந்தார். அதன், அவர் ஓய்வு பெறவில்லை என்பதை சிஎஸ்கே வெளியிட்ட தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் தோனி கேப்டன் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மேலும் ஒரு சீசன் தோனி விளையாட இருக்கிறார் என்பதை அறிந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், என்ன ஒரு வருத்தம் அவர் போட்டியின் தன்மைக்கு ஏற்ப களத்திற்கு 6, 7ஆவது இடங்களில் களமிறங்குகிறார். 4 அல்லது 5ஆவது இடங்களில் களமிறங்கி சிக்ஸரும், பவுண்டரியும் அடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆவலாக உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் சிஎஸ்கே அணியில் தோனி 235 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், சிஎஸ்கே அணியானது 142 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதோடு, 90 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இதில், 2016 மற்றும் 17 ஆம் ஆண்டுகளில் சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடர்களில் இடம் பெறவில்லை. 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இடம் பெற்று டைட்டில் வென்றது.
சிஎஸ்கே கேப்டன்:
ஒரு கேப்டனாக சிஎஸ்கே அணியில் தோனி 212 போட்டிகளில் விளையாடி 128 வெற்றியும், 82 தோல்வியும் கொடுத்துள்ளார். ரவீந்திர ஜடேஜா 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்வி கொடுத்துள்ளார். சுரேஷ் ரெய்னா 5 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்வி, ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.
எதிர்பார்ப்பு:
தோனியின் ரெவியூ சிஸ்டம், தோனியின் ஹெலிகாப்டர் ஷாட், பினிஷிங் என்று எல்லாவற்றையும் பார்ப்பதற்கு இப்போதே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.