ஃபாஸ்ட் பவுலர் கேப்டனாக இருந்தால் பெரிய பிரச்னை..! பாட் கம்மின்ஸின் கேப்டன்சியை விளாசிய ஆலன் பார்டர்

By karthikeyan VFirst Published Feb 21, 2023, 5:08 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஒரு முக்கியமான உத்தியை தவறவிட்ட ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸின் கேப்டன்சியை விமர்சித்துள்ளார் ஆலன் பார்டர்.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது டெஸ்ட்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரில் கடைசி 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி ஜெயித்தாலும் தொடர் சமன் தான் அடையும். இந்த டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு ஆஸ்திரேலிய அணிக்கு இல்லை.

பென்ச்சில் உட்கார வைப்பதற்கு ஏன் அவரை இந்தியாவிற்கு கூட்டிட்டு போனீங்க! ஆஸி., அணி தேர்வை விளாசிய கில்கிறிஸ்ட்

ஆனால் 3வது டெஸ்ட்டிலும் ஜெயித்துவிட்டால் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வதுடன், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிவிடும். 

2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி படுதோல்வி அடைந்த நிலையில், 2வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் தவறவிட்ட வியூகத்தை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர்.

டெல்லியில் நடந்த 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 139 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் எஞ்சிய 3 விக்கெட்டிற்கு இந்திய அணி 123 ரன்கள் அடித்தது. 139 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை குறைவான ஸ்கோருக்கு சுருட்டியிருக்கலாம். ஆனால் அதன்பின்னர் அக்ஸர் படேல் - அஷ்வின் இணைந்து 8வது விக்கெட்டுக்கு 114 ரன்களை குவித்தனர். 7 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்த நிலையில், ஃபாஸ்ட் பவுலரும் கேப்டனுமான பாட் கம்மின்ஸ் சில ஓவர்களை வீசியிருக்க வேண்டும். ஆனால் அவர் வீசாததால் அக்ஸர் படேல் - அஷ்வின் ஆகிய இருவரும் நிலைத்துவிட்டனர்.

IPL15 சீசன்களில் அசத்திய வீரர்களுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விருது வழங்கி கௌரவிப்பு! விருது வென்றவர்களின் விவரம்

இதுகுறித்து பேசிய ஆலன் பார்டர், ஃபாஸ்ட் பவுலர் எப்போதுமே அபாயகரமானவர் தான். ஆனால் கம்மின்ஸ் 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் அவர் பந்துவீசுவதற்கான அவசியம் இருந்தும் அவர் வீசவில்லை. இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. அதை பயன்படுத்தி சீக்கிரம் ஆல் அவுட் செய்யாமல், அதன்பின்னர் ஒரு பார்ட்னர்ஷிப் அமைக்கவிட்டது ஆஸ்திரேலிய அணி. இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்த பின், கம்மின்ஸ் இன்னும் சில ஓவர்களை வீசியிருந்தால் அது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் கம்மின்ஸ் மற்ற சில விஷயங்களையும் யோசித்ததால் அவர் பந்துவீசவில்லை. மற்ற வீரர்களாவது அவரிடம் சென்று, நீங்களே பந்துவீசலாமே என்று கேட்டிருக்கலாம். அவர்களும் அதை செய்யவில்லை. ஒரு ஃபாஸ்ட் பவுலரே கேப்டனாகவும் இருந்தால் இதுதான் பிரச்னை என்று ஆலன் பார்டர் தெரிவித்தார்.
 

click me!