தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிப்பு..! புதிய கேப்டன்கள்

Published : Feb 21, 2023, 02:41 PM IST
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிப்பு..! புதிய கேப்டன்கள்

சுருக்கம்

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

வெஸ்ட் இண்டீஸ் அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டெஸ்ட் தொடரும் அதைத்தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களும் நடக்கின்றன.

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் முதல் சுற்றுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியதன் விளைவாக வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன்சியிலிருந்து நிகோலஸ் பூரன் விலகினார். இதையடுத்து ஒருநாள் அணியின் கேப்டனாக ஷேய் ஹோப் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ரோவ்மன் பவல் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டனர்.

பென்ச்சில் உட்கார வைப்பதற்கு ஏன் அவரை இந்தியாவிற்கு கூட்டிட்டு போனீங்க! ஆஸி., அணி தேர்வை விளாசிய கில்கிறிஸ்ட்

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கு அவர்களின் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி: 

ஷேய் ஹோப் (கேப்டன்), ரோவ்மன் பவல் (துணை கேப்டன்), ஷமர் ப்ரூக்ஸ், யானிக் காரியா, கீஸி கார்டி, ரோஸ்டான் சேஸ், ஷெனான் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், அல்ஸாரி ஜோசஃப், பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன், ரொமாரியா ஷெஃபெர்ட், ஒடீன் ஸ்மித்.

யாரு வேணா என்ன வேணா சொல்லட்டும்.. எங்க சப்போர்ட் உனக்குத்தான்! ராகுலுக்கு கேப்டன் ரோஹித், கோச் டிராவிட் ஆதரவு

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி:

ரோவ்மன் பவல் (கேப்டன்), கைல் மேயர்ஸ் (துணை கேப்டன்), ஷமர் ப்ரூக்ஸ், யானிக் காரியா, ஜான்சன் சார்லஸ், ஷெல்டான் காட்ரெல், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், அல்ஸாரி ஜோசஃப், பிரண்டன் கிங், ஒபெட் மெக்காய், நிகோலஸ் பூரன், ரேமன் ரைஃபர், ரொமாரியா ஷெஃபெர்ட், ஒடீன் ஸ்மித்.
 

PREV
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?