உலகக் கோப்பையில் 9 போட்டிகளில் விளையாடும் அணியானது குறைந்தது 7 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். மேலும், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் தான் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்தியா நடத்தும் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இங்கிலாந்து, இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, வங்கதேசம் என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
சென்னை, பெங்களூரு, அகமதாபாத், தர்மசாலா, டெல்லி, மும்பை, லக்னோ, கொல்கத்தா, புனே, ஹைதராபாத் ஆகிய மைதானங்களில் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்படுகிறது. சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, கவுதம் காம்பீர், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பலரும் வர்ணனையாளர்களாக இடம் பெற்றுள்ளனர்.
World Cup Opening Ceremony: கிரிக்கெட் உலகக் கோப்பை தொடக்க விழாவில் யாருக்கெல்லாம் அனுமதி?
வரும் 4ஆம் தேதி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தொடக்க விழா நடக்க இருக்கிறது. மேலும், கேப்டன்ஸ் டே என்று சொல்லப்படும் 10 அணிகளின் கேப்டன்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் இந்த நாளில் நடத்தப்படுகிறது. இதற்கான அனைத்து அணிகளின் கேப்டன்களும் 3ஆம் தேதியே அகமதாபாத் செல்ல இருக்கின்றனர். ஆனால், இந்திய கேப்டன் உள்ளிட்ட சில வீரர்கள் 4ஆம் தேதி அகமதாபாத் செல்கின்றனர்.
இந்த நிலையில் தான் உலகக் கோப்பையில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் எப்படி அரையிறுதிக்கு வாய்ப்பு பெற்று இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போன்று தான் இந்த உலகக் கோப்பையும் நடத்தப்படும். 2023 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் மற்ற அணிகளுடன் ஒரு முறை ரவுண்ட் ராபின் முறையில் விளையாடும்.
ரவுண்ட் ராபின் 45 லீக் போட்டிகள்:
அதாவது, ஒரு அணி மொத்தமாக 9 போட்டிகளில் விளையாடும். இதில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். லீக் போட்டிகளில் மட்டும் 45 போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன் பிறகு 2 அரையிறுதிப் போட்டிகள். கடைசியாக இறுதிப் போட்டி என்று மொத்தமாக 48 போட்டிகள் நடத்தப்படுகிறது.
அரையிறுதிப் போட்டி:
ரவுண்ட் ராபினுக்குப் பிறகு அரையிறுதிப் போட்டிக்கு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணியானது, 4ஆவது இடத்தில் இருக்கும் அணியுடன் முதல் அரையிறுதிப் போட்டியில் விளையாடும். அதன் பிறகு 2ஆவது இடத்திலுள்ள அணியானது 3ஆவது இடத்திலுள்ள அணியுடன் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் விளையாடும்.
இறுதிப் போட்டி:
இதில், வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும். இறுதிப் போட்டி நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.
அரையிறுதிக்கு அணிக்கு எத்தனை புள்ளிகள் தேவைப்படும்?
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் படி, 9 போட்டிகளில் விளையாடும் அணிகள் குறைந்தது 7 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அப்படி 7 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் அணியானது அரையிறுதிப் போட்டிக்கு செல்லும். ஒரு வேளை 2 அணிகள் சமமான புள்ளிகள் பெற்றிருந்தால் நெட் ரன் ரேட் அடிப்படையில் அணிக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
உதாரணத்திற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைகளின் படி, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 3 அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்தன. 4ஆவது இடத்தில் நியூசிலாந்தும், 5ஆவது இடத்தில் பாகிஸ்தானும் 11 புள்ளிகள் பெற்றிருந்தன. ஆனால், நியூசிலாந்து ரன் ரேட் அடிப்படையில் அதிக புள்ளிகள் கொண்டிருந்த நிலையில், நியூசிலாந்து அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அணிகள் எவ்வாறு உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றன?
இந்தியா தகுதி பெற்ற பிறகு, அடுத்த 7 அணிகள் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக்கில் மூன்று ஆண்டு போட்டியாக முடிவெடுப்பதன் மூலம் தீர்மானிக்கப்பட்டது, இதில் 13 அணிகள் தலா எட்டு மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடர்களை விளையாடின.
நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அனைத்துமே போட்டியில் முதல் எட்டு இடங்கள் வழியாக கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்னேறியது, அதே நேரத்தில் கடைசி ஐந்து அணிகள் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கு சென்று, லீக் 2 மற்றும் மற்றவர்களுடன் இணைந்தனர். குவாலிஃபையர் பிளே-ஆஃப் போட்டி.
சூப்பர் லீக்கில் முறையே 10வது மற்றும் 13வது இடத்தைப் பிடித்த இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் 2023 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தகுதிச் சுற்று மூலம் மட்டுமே முன்னேறின. குழு ஆட்டத்திலும் சூப்பர் சிக்ஸ் போட்டியிலும் இலங்கை தோற்கடிக்கப்படவில்லை, அதே நேரத்தில் சூப்பர் சிக்ஸர்களில் நிகர ஓட்ட விகிதத்தில் ஸ்காட்லாந்து மற்றும் ஜிம்பாப்வேயை பின்னுக்குத் தள்ளி நெதர்லாந்து தகுதி பெற்றது. இதன் மூலமாக கடைசியாக இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் 2023 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றன.
உலகக் கோப்பை பரிசுத் தொகை:
இந்த உலகக் கோப்பை தொடருக்கு மொத்தமாக 10 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 83,10,50,000.00) அதாவது, ரூ.83 கோடி என்று அறிவிக்கப்பட்டது. இதில் சாம்பியனாகும் அணிக்கு 4 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 33,24,20,000.00) அதாவது ரூ.33.24 கோடி என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், 2ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.16,62,10,000.00) அதாவது, ரூ.16.62 கோடி அறிவிக்கப்பட்டது. அதே போன்று அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடையும் 2 அணிகளுக்கு 16,00,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 131898908) அதாவது, ரூ.13.18 கோடி ஆகும். அதே போல குரூப் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறும் 6 அணிகளுக்கு 6,00,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 4,92,83,607) அதாவது ரூ.4.92 கோடி ஆகும்.
கடைசியாக ஒவ்வொரு லீக் போட்டியிலும் (மொத்தம் 45 லீக் போட்டிகள்) வெற்றி பெறும் அணிகளுக்கு 18,00,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,49,28,370.74) அதாவது 1.49 கோடி வழங்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.