
இந்தியாவில் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் என்று 10 அணிகள் இடம் பெற்று சென்னை, பெங்களூரு, லக்னோ, அகமதாபாத் என்று 10 மைதானங்களில் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. வரும் 4ஆம் தேதி கேப்டன்ஸ் டே என்று அழைக்கப்படும் 10 அணிகளின் கேப்டன்களின் அணி வகுப்பு நிகழ்ச்சியோடு தொடக்க விழாவும் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.
Hanghzou Asian Games 2023: பிடி உஷா சாதனையை சமன் செய்த தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ்!
கிரிக்கெட் உலகக் கோப்பையில் 45 லீக் போட்டிகள், 2 அரையிறுதிப் போட்டிகள் மற்றும் ஒரு இறுதிப் போட்டிகள் என்று மொத்தமாக 48 போட்டிகள் நடக்கிறது. இந்த நிலையில் தான் உலகக் கோப்பை தொடருக்கான கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பட்டியலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
World Cup Opening Ceremony: கிரிக்கெட் உலகக் கோப்பை தொடக்க விழாவில் யாருக்கெல்லாம் அனுமதி?
அதில், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி மற்றும் பெங்காலி என்று 9 மொழிகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில், கிரிக்கெட் வர்ணனையாளர்களாக உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்த 8 இந்திய வீரர்களான சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கவுதம் காம்பீர், பியூஷ் சாவ்லா, ஸ்ரீ சாந்த், ஹர்பஜன் சிங், சந்தீப் பட்டீல் ஆகியோரும், 7 முன்னாள் இந்திய கேப்டன்களான மிதாலி ராஜ், அஞ்ஜூம் சோப்ரா, சுனில் கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத், ரவி சாஸ்திரி, கவுதம் காம்பீர், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுடன் வெளிநாட்டு உலகக் கோப்பை சாம்பியன்களான ரிக்கி பாண்டிங், இயான் மோர்கன், மேத்யூ ஹைடன், ஷேன் வாட்சன், ஆரோன் பிஞ்ச், ரமீஸ் ராஜா ஆகியோரும், முன்னாள் இந்திய தேர்வுக்குழு தலைவர்களான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், எம்.எஸ்.கே.பிரசாத், சந்தீப் பட்டீல், குண்டப்பா விஸ்வநாத், சுனில் ஜோஷி ஆகியோரும், வேகப்பந்து வீச்சாளர்களான இர்பான் பதான், வாக்கர் யூனிஸ், டேல் ஸ்டெயின், ஷேன் பாண்ட் ஆகியோரும், 2019 உலகக் கோப்பை கேப்டன்களான பாப் டூப்ளெசிஸ், இயான் மோர்கன், ஆரோன் பிஞ்ச், உலகக் கோப்பை வின்னிங் கேப்டன்களான ரிக்கி பாண்டிங், இயான் மோர்கன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.