முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் அகா சல்மான்!

Published : Dec 27, 2022, 02:30 PM IST
முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் அகா சல்மான்!

சுருக்கம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் அகா சல்மான் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் சௌதி தலைமையிலான நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று கராச்சியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணி:

அப்துல்லா ஷாஃபிக், இமாம் உல் ஹக், ஷான் மசூத், பாபர் அசாம் (கேப்டன்), சௌத் ஷகீல், சர்ஃபராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், நௌமன் அலி, முகமது வாசிம், அப்ரார் அகமது, மிர் ஹம்ஸா.

நியூசிலாந்து அணி:

டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், டிம் சௌதி (கேப்டன்), இஷ் சோதி, நீல் வாக்னர், அஜாஸ் படேல்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு காதல் மனைவி கொடுத்த காஸ்ட்லி கிறிஸ்துமஸ் கிஃப்ட்!

அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் ஆடி வருகிறது. பாகிஸ்தானின் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாஃபிக் (7), இமாம் உல் ஹாக் (24), ஷான் மசூத் (3), சௌத் ஷகீல் (22) என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்திருந்தது. இதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 161 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

100ஆவது டெஸ்ட்டில் சதம் அடித்து சாதனை படைத்த டேவிட் வார்னர்!

இதையடுத்து, 2ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய அவர் இரட்டை சதம் விளாசுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் 161 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். நிலைத்து நின்று ஆடிய சர்ஃபராஸ் அகமது 86 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த அகா சல்மான் பொறுமையாக ஆடி 155 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் சேர்த்து டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அகா சல்மான் 103 ரன்களில் சௌதி பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

6ஆவது மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: லவ்லினா, நிகாத் ஜரீன் தங்கம் வென்று அசத்தல்!

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் எடுத்துள்ளது. பந்து வீச்சில் நியூசிலாந்து தரப்பில் கேப்டன் டிம் சௌதி 3 விக்கெட்டும், அஜாஸ் படேல், இஷ் சோதி மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், நீல் வாக்னர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

100ஆவது டெஸ்டில் சாதனை படைத்த வார்னர்: 3ஆவது முறையாக இரட்டை சதம்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்
Ind vs NZ: கோலி, ரோகித் இன்.. 3 வீரர்களுக்கு கல்தா கொடுத்த தேர்வு குழு..?