100ஆவது டெஸ்ட்டில் சதம் அடித்து சாதனை படைத்த டேவிட் வார்னர்!

By Rsiva kumarFirst Published Dec 27, 2022, 10:42 AM IST
Highlights

100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்து வீச்சில் ஆஸ்திரேலியாவின் கிரீன் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும், லையான் மற்றும் போலண்டு தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

6ஆவது மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: லவ்லினா, நிகாத் ஜரீன் தங்கம் வென்று அசத்தல்!

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸ் ஆடி வருகிறது. ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 100 ஆவது டெஸ்டில் களமிறங்கினார். தனது 100ஆவது டெஸ்ட்டை ஆடும் வார்னர், இன்று தனது 100ஆவது டெஸ்ட் போட்டி சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கோர்டன் கிரீனிட்ஜ் 100ஆவது ஒரு நாள் போட்டியிலும், 100ஆவது டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டேவிட் வார்னர் அவருடன் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் வார்னர் சதம் அடித்தார். இது அவரது 100ஆவது ஒரு நாள் போட்டி ஆகும். 

IPL 2023: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மெல்போர்னில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார். தற்போது வரை ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் குவித்துள்ளது. இதில் வார்னர் 159 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 78 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். 

IPL 2023: சிஎஸ்கே அணியின் கேப்டனாக யார் செயல்படலாம்..? தோனியா ஸ்டோக்ஸா..? கிறிஸ் கெய்ல் அதிரடி

click me!