IPL 2023: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

By karthikeyan VFirst Published Dec 26, 2022, 10:43 PM IST
Highlights

ஐபிஎல் 16வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களமிறங்கிய கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் வழிகாட்டுதலில் அபாரமாக விளையாடி பிளே ஆஃபிற்கு முன்னேறியது.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கோர் டீம் வலுவாக இருக்கும் நிலையில், ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.16 கோடி கொடுத்து வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் நிகோலஸ் பூரனை எடுத்தது. மேலும், ஆல்ரவுண்டர் டேனியல் சாம்ஸ், ரிஸ்ட் ஸ்பின்னர் அமித் மிஷ்ரா, வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ரொமாரியோ ஷெஃபெர்டு, ஆஃப்கான் பவுலர் நவீன் உல் ஹக், ஜெய்தேவ் உனாத்கத் ஆகிய வீரர்களையும் இன்னபிற உள்நாட்டு சிறிய வீரர்களையும் லக்னோ அணி எடுத்தது.

IPL 2023: சிஎஸ்கே அணியின் கேப்டனாக யார் செயல்படலாம்..? தோனியா ஸ்டோக்ஸா..? கிறிஸ் கெய்ல் அதிரடி

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டி காக் - கேஎல் ராகுல். 3ம் வரிசையில் நிகோலஸ் பூரனும், 4ம் வரிசையில் தீபக் ஹூடாவும், 5ம் வரிசையில் கடந்த சீசனில் அசத்திய இளம் வீரர் ஆயுஷ் பதோனியும் ஆடுவார்கள். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 6ம் வரிசையில் ஃபினிஷர் ரோல் செய்வார்.

ஸ்பின்னர்களாக க்ருணல் பாண்டியா மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய இருவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக மார்க் உட், மோசின் கான், ஆவேஷ் கான் ஆகிய மூவரும் ஆடுவார்கள். மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் தீபக் ஹூடாவும் பந்துவீசுவார்கள் என்பதால் 7 பவுலிங் ஆப்சன் உள்ளது. 

பாண்டிங், லாரா, ஜெயவர்தனே, கிரேம் ஸ்மித் ஆகிய லெஜண்ட் வீரர்களின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்! புதிய வரலாறு

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா, மார்க் உட், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், மோசின் கான்.
 

click me!