100ஆவது டெஸ்டில் சாதனை படைத்த வார்னர்: 3ஆவது முறையாக இரட்டை சதம்!

By Rsiva kumarFirst Published Dec 27, 2022, 12:36 PM IST
Highlights

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் வார்னர் மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்து புது வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது.  3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 2ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பௌலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்கள் மட்டுமே எடுத்தது.

100ஆவது டெஸ்ட்டில் சதம் அடித்து சாதனை படைத்த டேவிட் வார்னர்!

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது. இதில், 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் வார்னர் இரட்டை சதம் அடித்து புது வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் மூன்று முறை டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ள பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இந்தியாவுக்கு ஒரு நாள் போட்டியில் 100ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியாவின் வார்னர் 100 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

6ஆவது மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: லவ்லினா, நிகாத் ஜரீன் தங்கம் வென்று அசத்தல்!

தற்போது டெஸ்ட் அரங்கில் 8000 ரன்களை கடந்த 8ஆவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் வார்னர் படைத்துள்ளார். வார்னர் 200 ரன்கள் எடுத்திருந்த போது ரிட்டயர்டு கர்ட் முறையில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 254 பந்துகளில் 2 சிக்சர்கள் 16 பவுண்டரிகள் உள்பட 200 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று கேமரூன் க்ரீக்கும் ரிட்டயர்டு கர்ட் முறையில் வெளியேறினார். 2ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

IPL 2023: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

click me!