நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி கடின இலக்கை நிர்ணயித்தது ஆஃப்கானிஸ்தான்..!

By karthikeyan VFirst Published Oct 31, 2021, 5:32 PM IST
Highlights

நமீபியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 160 ரன்களை குவித்து 161 ரன்கள் என்ற கடின இலக்கை நமீபியாவுக்கு நிர்ணயித்துள்ளது.
 

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து (க்ரூப் 1) மற்றும் பாகிஸ்தான் (க்ரூப் 2) ஆகிய 2 அணிகளும் ஒரு அடியை எடுத்து அரையிறுதியில் வைத்துவிட்டன.

க்ரூப் 1-ல் எஞ்சிய ஒரு இடத்திற்கான போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முன்னிலையில் உள்ளன. க்ரூப் 2-ல் இந்தியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளுக்கான வாய்ப்பும் ஓபனாகவே உள்ளது. அந்தவகையில் ஆஃப்கானிஸ்தானுக்கு இது முக்கியமான போட்டி.

இதையும் படிங்க - முதலில் இந்த பையனை ஆடவைப்பதை நிறுத்திட்டு அந்த சீனியர் வீரரை டீம்ல எடுங்க..! முன்னாள் பயிற்சியாளர் அதிரடி

அபுதாபியில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி, வழக்கம்போலவே பேட்டிங்கை தேர்வு செய்தது. 

ஆஃப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா சேஸாய், முகமது ஷேஷாத் (விக்கெட் கீப்பர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஜட்ரான், அஸ்கர் ஆஃப்கான், முகமது நபி (கேப்டன்), குல்பாதின் நைப், ரஷீத் கான், கரீம் ஜனத், ஹமீத் ஹசன், நவீன் உல் ஹக்.

இதையும் படிங்க - நியூசிலாந்தின் இந்த ஒரு அஸ்திரத்தை ரோஹித் அடித்து காலி செய்துவிட்டால் அவர் தான் மேட்ச் வின்னர்..! வெற்றி நமதே

நமீபியா அணி:

க்ரைக் வில்லியம்ஸ், மைக்கேல் வான் லிங்கன், ஜேன் க்ரீன் (விக்கெட் கீப்பர்), கெர்ஹார்ட் எராஸ்மஸ் (கேப்டன்), டேவிட் வீஸ், ஜெஜே ஸ்மிட், ஜேன் ஃப்ரைலிங்க், பிக்கி யா ஃப்ரான்ஸ், ஜான் நிகோல் லாஃப்டி - ஈட்டான், ருபென் ட்ரம்பெல்மேன், பெர்னார்டு ஸ்கோல்ட்ஸ்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஹஸ்ரதுல்லா சேஸாய் மற்று முகமது ஷேஷாத் ஆகிய இருவரும் இணைந்து ஆஃப்கானிஸ்தானுக்கு 6.4 ஓவரில் 53 ரன்களை சேர்த்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.  சேஸாய் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரஹ்மானுல்லா 4 ரன்னுக்கு நடையை கட்டினார். சிறப்பாக ஆடிய முகமது ஷேஷாத் 45 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.

இதையும் படிங்க - #INDvsNZ நீ பண்ண மாயாஜாலம்லாம் போதும் கிளம்புப்பா!சீனியர் வீரரிடம் சரணாகதியடையும் இந்திய அணி! உத்தேச ஆடும் 11

டி20 கிரிக்கெட்டில் ஆஃப்கானிஸ்தானுக்காக தனது கடைசி இன்னிங்ஸை ஆடிய அஸ்கர் ஆஃப்கான் 23 பந்தில் 31 ரன்கள் அடித்தார். கேப்டன் முகமது நபி பொறுப்புடனும் அதேவேளையில், அடித்தும் ஆடி 17 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 32 ரன்களை விளாச, 20 ஓவரில் 160 ரன்களை குவித்த ஆஃப்கானிஸ்தான் அணி, 161 ரன்களை நமீபியாவுக்கு நிர்ணயித்துள்ளது.

ரஷீத் கான், முஜிபுர் ரஹ்மான், முகமது நபி என உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்களை பெற்றிருக்கும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இது கடினமான இலக்கு.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும்..! சத்தியமா இந்தியா வராது.. பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆருடம்
 

click me!