டி20 உலக கோப்பை: ஆஃப்கானிஸ்தான் - நமீபியா மோதல்.. டாஸ் ரிப்போர்ட்..! ஆஃப்கானிஸ்தான் வழி தனி வழி

By karthikeyan VFirst Published Oct 31, 2021, 3:37 PM IST
Highlights

நமீபியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து (க்ரூப் 1) மற்றும் பாகிஸ்தான் (க்ரூப் 2) ஆகிய 2 அணிகளும் ஒரு அடியை எடுத்து அரையிறுதியில் வைத்துவிட்டன.

க்ரூப் 1-ல் எஞ்சிய ஒரு இடத்திற்கான போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முன்னிலையில் உள்ளன. க்ரூப் 2-ல் இந்தியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளுக்கான வாய்ப்பும் ஓபனாகவே உள்ளது. அந்தவகையில் ஆஃப்கானிஸ்தானுக்கு இது முக்கியமான போட்டி.

இதையும் படிங்க - #INDvsNZ நீ பண்ண மாயாஜாலம்லாம் போதும் கிளம்புப்பா!சீனியர் வீரரிடம் சரணாகதியடையும் இந்திய அணி! உத்தேச ஆடும் லெவன்

அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணியை தவிர வேறு எந்த அணியும் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததே இல்லை. அதேபோல, ஒரேயொரு போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் இலக்கை விரட்டிய அணிகள் தான் வெற்றி பெற்றிருக்கின்றன. முதலில் பேட்டிங் ஆடி வெற்றி பெற்ற ஒரே அணி ஆஃப்கானிஸ்தான் தான். ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில், முதலில் பேட்டிங் ஆடி 190 ரன்களை குவித்து, பின்னர் ஸ்காட்லாந்தை 60 ரன்களுக்கே சுருட்டி 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க - ஆடவர் கிரிக்கெட் அணியின் முதல் பெண் பயிற்சியாளர் சாரா டெய்லர்..! இவர் தான் “பெண் தோனி” தெரியுமா..?

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் கூட முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி, கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கியது. ஆனால் கடைசியில் ஆசிஃப் அலி ஒரே ஓவரில்(19) ஆட்டத்தை தலைகீழாக மாற்றிவிட்டார். ரஷீத் கான், முஜிபுர் ரஹ்மான், முகமது நபி ஆகிய தரமான ஸ்பின்னர்களை பெற்றிருக்கும் ஆஃப்கானிஸ்தான் அணியின் பெரும் பலமே பவுலிங் தான் என்பதால், எவ்வளவு குறைவான இலக்கையும் தங்களால் கட்டுப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையில் முதலில் பேட்டிங் ஆடுகிறது ஆஃப்கானிஸ்தான் அணி. 

ஆஃப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா சேஸாய், முகமது ஷேஷாத் (விக்கெட் கீப்பர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஜட்ரான், அஸ்கர் ஆஃப்கான், முகமது நபி (கேப்டன்), குல்பாதின் நைப், ரஷீத் கான், கரீம் ஜனத், ஹமீத் ஹசன், நவீன் உல் ஹக்.

இதையும் படிங்க - இவ்வளவு பெரிய தவறை செய்து இந்திய அணியை ஆபத்தில் சிக்கவைத்தது தோனியா..? வெளிவந்தது அதிர்ச்சி தகவல்

நமீபியா அணி:

க்ரைக் வில்லியம்ஸ், மைக்கேல் வான் லிங்கன், ஜேன் க்ரீன் (விக்கெட் கீப்பர்), கெர்ஹார்ட் எராஸ்மஸ் (கேப்டன்), டேவிட் வீஸ், ஜெஜே ஸ்மிட், ஜேன் ஃப்ரைலிங்க், பிக்கி யா ஃப்ரான்ஸ், ஜான் நிகோல் லாஃப்டி - ஈட்டான், ருபென் ட்ரம்பெல்மேன், பெர்னார்டு ஸ்கோல்ட்ஸ்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும்..! சத்தியமா இந்தியா வராது.. பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆருடம்

click me!