நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன் இந்திய அணியை மிகக்கடுமையாக எச்சரித்த கவாஸ்கர்..!

By karthikeyan VFirst Published Oct 31, 2021, 4:50 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்பாக இந்திய அணியை எச்சரித்துள்ளார் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று துபாயில் நடக்கிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 அணிகளுமே அவற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றன. பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிய இந்த 2 அணிகளும், இன்றைய போட்டியில் மோதுகின்றன. அதன்பின்னர் இந்த 2 அணிகளும் மோதும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுவிடும். எனவே இன்றைய போட்டி கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டியை போன்றது. இன்றைய போட்டியில் ஜெயிக்கும் அணி தான் பாகிஸ்தானுக்கு அடுத்த இடத்தை பிடித்து, க்ரூப் 2-ல் இடம்பெற்றிருக்கும் அணிகளில் 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகம்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும்..! சத்தியமா இந்தியா வராது.. பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆருடம்

அந்தவகையில், இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டி இரு அணிகளுக்குமே கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டியை போன்றது. எனவே இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் தான் களமிறங்குகின்றன.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய இந்திய அணியின் காம்பினேஷன் விமர்சனத்துக்குள்ளானது. புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக பேட்டிங்கும் ஆடக்கூடிய மிதவேகப்பந்துவீச்சாளரான ஷர்துல் தாகூரை ஆடவைத்திருக்கலாம், முழு ஃபிட்னெஸுடன் இல்லாத ஹர்திக் பாண்டியாவா ஆடவைத்தது, அனுபவம் வாய்ந்த சீனியர் ஸ்பின்னர் அஷ்வினை ஆடவைக்காமல் மாயாஜால ஸ்பின்னர் என்ற பெயரில் அனுபவமே இல்லாத வருண் சக்கரவர்த்தியை ஆடவைத்தது என அணி தேர்வின் மீது பல விமர்சனங்கள் எழுந்தன.

இதையும் படிங்க - நியூசிலாந்தின் இந்த ஒரு அஸ்திரத்தை ரோஹித் அடித்து காலி செய்துவிட்டால் அவர் தான் மேட்ச் வின்னர்..! வெற்றி நமதே

இந்திய அணி தேர்வின் மீது விமர்சனங்கள் இருந்தாலும், நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கான அணியில் பெரிதாக மாற்றங்கள் செய்யப்படமாட்டாது என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அணியின் ஆலோசகராக இருக்கும் தோனி, ஆடும் லெவன் காம்பினேஷனில் பெரிதாக மாற்றங்களை செய்ய விரும்பாதவர்.

இந்நிலையில், இந்திய அணியில் அதிகமான மாற்றங்கள் செய்தால், அது பயத்தை வெளிப்படுத்துவதாக அமையும் என்றும், அதனால் அதிக மாற்றங்கள் செய்யக்கூடாது என்றும் கருத்து கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

இதையும் படிங்க - ஆடவர் கிரிக்கெட் அணியின் முதல் பெண் பயிற்சியாளர் சாரா டெய்லர்..! இவர் தான் “பெண் தோனி” தெரியுமா..?

இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், இந்திய அணி நிறைய மாற்றங்களை செய்யாது. தோல்விக்கு பிறகு அணியில் நிறைய மாற்றங்கள் செய்தால், அது பயத்தை வெளிப்படுத்துவதாக அமையும். இந்திய அணியின் ஒரேயொரு பிரச்னை ஹர்திக் பாண்டியாவின் தோள்பட்டை காயம் தான். ஆனால் அவர் பயிற்சியில் பந்துவீசியதாக வந்த தகவல், இந்திய அணிக்கு நல்லது. அவர் ஒருசில ஓவர்கள் வீசுவது இந்திய அணிக்கு பலமாக அமையும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!