ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் பாலிவுட் நடிகர் சோனு சூட் ஐபிஎல் தொடருக்கு கேமராமேன் தேவைப்பட்டால் நான் ரெடியாக இருக்கிறேன் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கிய ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் இறுதிப் போட்டி தற்போது அதே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்த அணியில் அப்துல் சமாத் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷாபாஸ் அகமது இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் இந்த போட்டிக்கு முன்னதாக பாலிவுட் இரு அணிகளுக்கும் வாழ்த்து தெரிவித்த சோனு சூட், ஐபிஎல் தொடருக்கு கேமராமேன் தேவைப்பட்டால் தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். அதோடு, செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரின் போது கேமரா எடுத்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வருண் அல்லது நட்டு – டிராபியை வெல்லப் போகும் அந்த தமிழன் யார்? டாஸ் வென்ற ஹைதராபாத் பேட்டிங்!
சென்னையின் கோட்டையான எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கடந்த 2016 ஆம் ஆண்டு டிராபியை கைப்பற்றியது.
ஐபிஎல் டிராபியை கம்மின்ஸ் வென்றால் – நவீன காலத்தில் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராவார்!
இதே போன்று 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் முறையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டிராபியை வென்றது. இன்று நடைபெறும் ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் டிராபியை வெல்லப் போகும் அணி எது என்பதை தெரிந்து கொள்ள ஒவ்வொருவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
Incase needs a cameraman…I am available 🎥 😜 All the best and 🏏 pic.twitter.com/TbiFYI62Bc
— sonu sood (@SonuSood)