
நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும், 2ம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி 88 தொகுதிகளுக்கும், 3ம் கட்டமாக மே 7ம் தேதி 93 தொகுதிகளுக்கும், 4ம் கட்டமாக மே 13ம் 96 தொகுதிகளுக்கும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
நடாசாவை பிரிந்தால் ஜீவனாம்சமாக 70 சதவிகித சொத்தை இழக்கும் ஹர்திக் பாண்டியா?
இந்த நிலையில் 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்றும், 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதன்படி இன்று 6ம் கட்ட வாக்குப்பதிவு உத்தரபிரதேசத்தில் 14, ஹரியானா 10, பீகார், மேற்கு வங்கத்தில் 8, டெல்லி 7, ஒடிசா 6, ஜார்க்கண்ட் 4, ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதியிலும் மொத்தம் இன்று 8 மாநிலங்களில் 58 தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் 2024 பரிசுத் தொகை எவ்வளவு? கடந்த ஆண்டு ரூ.20 கோடி, இந்த ஆண்டு ரூ.25 கோடியா?
இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி தனது குடும்பத்துடன் சென்று இன்று தனது வாக்கை செலுத்தியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஞ்சிக்கு திரும்ப சென்ற தோனி இன்று ராஞ்சியில் வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று தனது வாக்கை செலுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து கடைசி அணியாக வெளியேறியது.
KKR & SRH அணியில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய வீரர்கள் யாருமில்லை – ஷ்ரேயாஸ், நட்டு, ரிங்கு, புவி!
இந்த தொடரில் விளையாடிய 14 போட்டிகளில் 7ல் வெற்றியும், 7ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.