ஐபிஎல் டிராபியை கம்மின்ஸ் வென்றால் – நவீன காலத்தில் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராவார்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றால் நவீன காலத்தில் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவர் என்ற சாதனையை படைப்பார்.

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final
பரபரப்புக்கு மத்தியில் கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்ந் நடைபெறுகிறது.
KKR vs SRH, IPL Final 2024
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. சென்னையில் தொடக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த 17ஆவது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
IPL 2024 Final
இதில், சிஎஸ்கே வெற்றி பெற்றது. இதே போன்று நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரின் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. பெங்களூருவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final
இதையடுத்து, நடைபெற்ற முதல் குவாலிஃபையர் சுற்று போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில், கொல்கத்தா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final
இதைத் தொடர்ந்து நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறியது.
Sunrisers Hyderabad
இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. பின்னர், கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Pat Cummins
இதன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 3ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில், ஒரு முறை சாம்பியனானது. ஒரு முறை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இன்று நடைபெறும் ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final
இந்த சீசனில் கொல்கத்தா விளையாடிய குவாலிஃபையர் 1 உள்பட 15 போட்டிகளில் 10ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்துள்ளது. மேலும், 2 போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. இதே போன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் குவாலிஃபையர் 1 மற்றும் குவாலிஃபையர் 2 உள்பட விளையாடிய 16 போட்டிகளில் 9 வெற்றி 6 தோல்வி அடைந்துள்ளது. மேலும், ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை.
KKR vs SRH, IPL Final 2024
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 தொடரில் இரு அணிகளும் 2 முறை மோதியுள்ளன. இந்த 2 முறையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final
இந்தப் போட்டியைத் தொடர்ந்து இரு அணிகளும் முதல் குவாலிஃபையர் சுற்று போட்டியில் மோதின. இதில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு போட்டிகளிலும் கேகேஆர் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 3ஆவது முறையாக இரு அணிகளும் மோதுகின்றன. இந்தப் போட்டி ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி. சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
KKR vs SRH, IPL 2024 Final
நேற்று சென்னையில் பரவலாக பெய்த மழையின் காரணமாக கேகேஆர் அணியானது பயிற்சி போட்டியை ரத்து செய்தது. ஆனால், இன்று சென்னையில் வானம் தெளிவாக இருக்கும் நிலையில் மழை பெய்ய வாய்ப்பில்லை. ஆதலால் போட்டி முழுமையாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IPL 2024 Final
இந்த நிலையில் இன்று நடைபெறும் ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றால் நவீன் காலத்தில் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவர் என்ற சாதனையை படைப்பார்.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final
இதற்கு முன்னதாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த போட்டிகளில் ஆஷஸ், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற கேப்டனாக சாதனை படைத்திருக்கிறார். இந்த பட்டியலில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ஐபிஎல் 2024 தொடரும் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.